Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் இனி அபராதம் !

அரசாணைப்படி தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் இனிய அபராதம் மிதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பலரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு தமிழை பார்த்த வரலாறு தமிழ்நாட்டுக்கு உரியது. இதுபோல தமிழ் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த கட்சிகள் தான் தமிழ்நாட்டில் அதிகம்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டில் தமிழில் பேசுவதற்கு பதிலாக ஆங்கிலத்திலும் தமிழையும் கலந்து பேசும் நபர்கள் அதிகரித்து விட்டனர். இதன் காரணமாக பெயர் பலகையில் கூட அதே போல தமிழும் ஆங்கிலமும் கலந்த தங்கிலீஷ் எனப்படும் வடிவத்தில் பெயர் பலகையில் வைப்பது தற்போது பொதுவான நடைமுறையாக தமிழ்நாட்டின் நிலவி வருகிறது.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசாணை ஒன்றை வெளியிட்டது அதன்படி தமிழில் தான் பெயர் பழகி இருக்க வேண்டும் மற்ற மொழிக்கு ஆன இடம் தமிழுக்கு பின் தான் கொடுக்க வேண்டும். என அந்த  அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் இதை யாரும் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை.

--Advertisement--

‘மனக்கவரும் தென்றலிலே  குளிரா இல்லை தோப்பில் நிழலா இல்லை தனிப்பெருதான்  துன்பம் மிகு தமிழ் தெருவில் தமிழ்தான் இல்லை’ என மனம் வெந்து பாடிய புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்கள்  கண்ட நிலை தற்போது வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.

இந்த நிலைமையை மாற்றும் விதமாக   உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வந்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் அரசின் ஆணைப்படி தொழில் நிறுவனங்கள் கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும். முதல் முறை ஒரு தொகையும் மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம் விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த 2018-22   20 வரை 6074  கடைகளில் 4.85  லட்சமும், 349  உணவகங்களிடமிருந்து 32000  ரூபாய்  அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத தொகை இனி பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இது போன்ற முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top