அட்டக்கத்தி நந்திதா-வா இது..? என்ன இத்த தண்டி ஆகிட்டாங்க..? பதறிய ரசிகர்கள்..!

அட்டக்கத்தி நந்திதா-வா இது..? என்ன இத்த தண்டி ஆகிட்டாங்க..? பதறிய ரசிகர்கள்..!

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகை நந்திதா. முதலில் தமிழ் படங்களில் நிறைய நடித்த அவர், சில ஆண்டுகளாக தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தெலுங்கில் வாய்ப்பிழந்த நடிகைகள், தமிழில் வரவேற்கப்படுவது போல, தமிழில் வாய்ப்பிழந்த நடிகைகள் தெலுங்கு பக்கம் ஒதுங்கி விடுகின்றனர்.

சமீபமாக தெலுங்கு திரையுலகில் தமிழ் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு பெரிய இமேஜ் ஏற்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டில், கன்னட படம் ஒன்றில், நந்திதா அறிமுகமானார். நந்தா லவ்ஸ் நந்திதா என்ற இந்த கன்னட மொழி படம் வெற்றி பெற்றது.

அட்டக்கத்தி நந்திதா-வா இது..? என்ன இத்த தண்டி ஆகிட்டாங்க..? பதறிய ரசிகர்கள்..!

நந்திதா

தொடர்ந்து தமிழில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி என்ற படத்தில் நந்திதா நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் மூலம் இயக்குநர் பா. ரஞ்சித், படத்தில் நடித்த தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர், நல்ல அறிமுகத்தை, கவனத்தை தமிழ் ரசிகர்களிடம் பெற்றனர்.

அடுத்து துரை செந்தில்குமார் டைரக்ட் செய்த எதிர்நீச்சல் படத்தில், தடகள வீராங்கணையாக நந்திதா நடித்திருந்தார். இதில் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு கோச்சிங் சொல்லி தருவார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, படத்தில் விஜய் சேதுபதியுடன் மிகச்சிறந்த காமெடி நடிப்பை நந்திதா தந்திருப்பார். இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

தொடர்ந்து முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு, புலி, கலகலப்பு 2, காத்திருப்போர் பட்டியல், அசுரவதம், தேவி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

அட்டக்கத்தி நந்திதா-வா இது..? என்ன இத்த தண்டி ஆகிட்டாங்க..? பதறிய ரசிகர்கள்..!

தமிழில் வாய்ப்பில்லை…

எனினும் தமிழில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்றார்.

ஆந்திராவில் அரைகுறை ஆடைகளுடன் நடிக்க நாயகி சம்மதித்தால், வாய்ப்புகள் குவியும் என்பதால் நந்திதா அங்கு கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.

அவர் நடித்த சில தெலுங்கு படங்களை பார்க்கும் போது, இது அட்டக்கத்தி நந்திதாவா என ஆச்சரியம் தோன்றும் அளவுக்கு, அம்மணி கிளாமரில் அசத்தி வருகிறார்.

பதறிய ரசிகர்கள்

அதுமட்டுமின்றி இங்கு ஸ்மார்ட் ஆக காட்சியளித்த நந்திதா, அங்கு போய் செமத்தியாக வெயிட் போட்டு, குண்டூர் குண்டம்மா என வர்ணிக்கும் அளவுக்கு மாறி இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான அட்டக்கத்தி நந்திதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து, என்ன இத்த தண்டி ஆகிட்டாங்க என ரசிகர்கள் பதறி போயிருக்கின்றனர்.