“வீட்டு தோட்டத்தில் மாவு பூச்சியா…!” – ஒரே வாரத்தில் விரட்டி அடிக்க இயற்கை பூச்சிக்கொல்லி..!!

 பார்த்துப்பார்த்து வீட்டுத் தோட்டத்தில் பலவிதமான காய் கறி,பயிர்களையும், பூச்செடிகளையும் போட்டு நீங்கள் ரசித்து இருப்பதோடு மட்டுமில்லாமல் அதிலிருந்து கிடைக்கும் காய்கறிகளைக் கொண்டு நஞ்சு இல்லாத உணவுகளை உங்கள் வீட்டில் சமைத்து உண்டு இருப்பீர்கள்.

 அப்படிப்பட்ட மிக ரம்யமான மனதுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய சின்ன தோட்டம் என்றாலும் அதை பெரிய அளவில் பாதுகாத்த பாதுகாத்து வந்த நீங்கள் தற்போது உங்கள் தோட்டத்தில் பரவி இருக்கும் மாவு பூச்சியினை விரட்டுவதற்கு கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்களா? அப்படி என்றால் வீட்டிலேயே இந்த மாவு பூசையை விரட்டக்கூடிய அற்புதமான இயற்கை பூச்சி கொல்லியை செய்வது எப்படி என பார்க்கலாமா?

 பெரும்பாலும் இந்த மாவு பூச்சியால் பூக்கள் அப்படியே உதிர்ந்து போகும். சில சமயம் பூக்கள் பூக்கவும் செய்யாது. செடிகளின் நுனிகளில் பாதிப்பை அதிக அளவு ஏற்படக்கூடிய இந்த மாவு பூச்சி வெள்ளை நிறத்தில் இருக்கும்.

 இதனை எப்படி இயற்கை பூச்சிக்கொல்லியை கொண்டு விரட்டலாம் என தெரியுமா?

மாவு பூச்சியை விரட்டும் இயற்கை பூச்சிக்கொல்லி தேவையான பொருட்கள்

1.இஞ்சி 50 கிராம்

2.பூண்டு 50 கிராம்

3.பச்சை மிளகாய் 25 கிராம்

4.ஒரு லிட்டர் தண்ணீர்

முதலில் இந்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை மையாக அரைத்துக் கொண்டு ஒரு லிட்டர் தண்ணீரில் நன்றாக கலக்கி விடுங்கள்.

 இதனை அடுத்து உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எந்த செடிகளின் மீது மாவு பூச்சிகளின் ஆதிக்கம் இருக்கிறதோ அதை இந்த கரைசலைக் கொண்டு எளிதில் விரட்டி விடலாம்.

 இப்போது கலந்திருக்க கூடிய இந்த கரைசலை நீங்கள் ஒரு தெளிப்பானில் ஊற்றிக் கொள்ளுங்கள்.பின்னர் மாவு பூச்சி இருக்கும் பகுதிகளில் இதை நன்கு தெளித்து விடுங்கள்.

 தொடர்ந்து ஒரு வாரம் இப்படி நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் தோட்டத்தில் உங்களை பயமுறுத்திக் கொண்டிருந்த மாவு பூச்சியை அடியோடு விரட்டலாம்.

 எந்த பக்க விளைவையும் ஏற்பட்டுத்தாத இயற்கை பூச்சிக்கொல்லியான இதைக் கொண்டு நீங்கள் மீண்டும் உங்கள் தோட்ட செடிகள் செழிப்பாகவும் வளமாகவும் மாவு பூச்சிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகாமல் இருக்க வைக்கலாம்.

   

--Advertisement--