“பீரியட்ஸ் நேரத்தில் அது இருந்தால்..” ஓப்பனாக பேசிய நடிகை நயன்தாரா…!

“பீரியட்ஸ் நேரத்தில் அது இருந்தால்..” ஓப்பனாக பேசிய நடிகை நயன்தாரா…!

மலையாள கரையோரம் தமிழ் பேசும் குருவி என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப மலையாள தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நம்பர் நடிகை நயன்தாரா இன்று தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் நம்பர் ஒன்றாக திகழ்கிறார்.

நடிகை நயன்தாரா..

நடிகர்களை மட்டும் தான் சூப்பர் ஸ்டார் இருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் நடிகை நயன்தாரா ஐயா திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஒரு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை தமிழில் ஏற்படுத்திக் கொண்டார்.

இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

ஷாருக்கானோடு இவர் இணைந்து நடித்த ஜவான் திரைப்படம் பாலிவுட் திரையரங்குகளில் அதிக அளவு வசூலை பெற்று நயன்தாராவிற்கு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்தி தந்துள்ளது. எனினும் தென்னிந்திய மொழிகளில் சற்று தேக்கம் அடைந்திருக்கும் நயன்தாரா, திரைப்படங்களில் நடிப்பதோடு இல்லாமல் பல்வேறு பிசினஸ்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

பீரியட்ஸ் நேரத்தில்..

இதனை அடுத்து பல்வேறு தொழில்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கும் நடிகை நயன்தாரா தற்போது பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனத்தையும், சானிட்டரி நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இந்த இரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே இருந்த நிறுவனங்கள் தான். அவற்றை விலைக்கி வாங்கி பெயரை மட்டும் மாற்றி இருக்கும் நயன்தாரா தன்னுடைய சிறப்பான கவனத்தை தற்போது தொழில்களில் காட்டி வருவது பெண்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

பொதுவாகவே மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு பல சிரமங்கள் ஏற்படும். அதற்கு எந்த பெண்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் பீரியட்ஸ் நேரத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை குறித்து தற்போது ஓப்பனாக நயன்தாரா பேசியிருப்பது பெண்களுக்கு உதவிகரமாக உள்ளது.

இந்நிலையில் இவருடைய நிறுவனத் தயாரிப்புகளின் வெற்றியை கொண்டாட கூடிய விதத்தில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர் பீரியட்ஸ் நேரத்தில் நாப்கின்களை பயன்படுத்துவது குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் இன்னும் கிராமப்புற மக்கள் மத்தியில் பீரியட்ஸ் காலகட்டத்தை வெளிப்படுத்த ஒரு வித கூச்ச மனப்பான்மை காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கடைகளிலிருந்து சானிட்டரி நாப்கின்களை கேட்டு வாங்க அவர்கள் கூச்சப்படுகிறார்கள்.

இது முற்றிலும் தவறானது. ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய அடிப்படை தேவை தான். இது இதை கேட்பதில் எந்தவிதமான கூச்சமோ, தயக்கமோ இருக்க வேண்டியதில்லை என்று கிராமப்புறத்தில் இருக்கும் பெண்களுக்கு புரியும்படி பேசி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பீரியட்ஸ் நேரத்தில் ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்வது அவசியமானது. அதை பற்றி தயக்கமும், வெட்கமோ தேவையில்லை என்று வெளிப்படையாக பேசிய நடிகை நயன்தாராவின் பேச்சு இன்று இணையங்களில் வைரலாகி விட்டது.

இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் அனைவரும் அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. உண்மையிலேயே இந்த நிலை மாறுவதால் பெண்களுக்கு நன்மை ஏற்படும். எனவே அவர்களுக்கு பக்குவமாக இதை விட யாரும் எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்ல முடியாது என்ற கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்த பேச்சினை கேட்க கூடிய ஆண்கள் பெண்களுக்கு இது போன்ற நேரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும். அதை விடுத்து உதாசீனப்படுத்துவதோ, தள்ளி வைப்பதும் தவறு என்பதை புரிந்து கொண்டால் இந்நிலை நிச்சயம் மாறும் என்பதில் ஐயமில்லை.

   

--Advertisement--