Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

என்னடா இது லேடி சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை.. கொந்தளிக்கும் நயன்தாரா வெறியர்கள்..!

சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்பது வழக்கம். ஆனால், ஹீரோவுக்கு அக்கா கேரக்டரில் நடிப்பதற்கு நாயகியை விட இரட்டை மடங்கு சம்பளம் ஒரு முன்னணி நடிகை கேட்பது, இந்திய சினிமா வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

நயன்தாரா

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, இப்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஒரு படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். அவருக்கு கன்னட படத்திலும் இப்போது நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது

மோகன்லால் மலையாளத்தில் நடித்த லூசிபர் படத்தில், அவருக்கு தங்கையாக மஞ்சுவாரியார் நடித்திருந்தார். அதே படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியானது. அப்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.

கேஜிஎப் நாயகன் யாஷ் நடிக்கும் டாக்ஸிக்

இந்நிலையில் கேஜிஎப் படத்தின் நயாகன் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் என்ற படத்தில் நயன்தாரா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

--Advertisement--

நடிகர் மாதவன் நடித்த நளதமயந்தி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கீத்து மோகன்தாஸ். இவரது இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் டாக்ஸிக். இந்த படத்தில் ஹீரோவாக யாஷ் நடிக்கிறார். அந்த படத்தில் அவரது அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

கரீனா கபூர் விலகல்

ஆனால் அவர் ஒரு கட்டத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அந்த படத்திலிருந்து திடீரென விலகி விட்டார், கரீனா கபூருக்கு பதிலாக அந்த கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க, அதாவது ஹீரோ யாஷ் அக்காவாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

20 கோடி ரூபாய்

இந்த படத்தில் அப்படி ஒரு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு டபுள் மடங்கு சம்பளம் நயன்தாரா கேட்டதாகவும் தகவல் வெளியானது. அதாவது இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா புதிய படங்களில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

இந்நிலையில் கேசிஎப் ஹீரோ யாஷ் நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு அக்காவாக நடிக்க 20 கோடி ரூபாய் தனக்கு சம்பளம் வேண்டும் என்று நயன்தாரா கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அக்கா கதாபாத்திரம்

அதாவது கதாநாயகனுக்கே அக்காவாக நடிக்கும் முக்கியமான கதாபாத்திரம் என்பதால், நயன்தாரா 20 கோடி ரூபாய் கேட்டு இருப்பது படத் தயாரிப்பு குழுவினரை பதைபதைக்க செய்துள்ளது.

நயன்தாரா வெறியர்கள்

என்னதான் இருந்தாலும், இது ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கிற வயசா, என்னடா இது லேடி சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை என்று கொந்தளிக்கும் நயன்தாரா வெறியர்களுக்கு, அதுக்கு 20 கோடி சம்பளம் தருகிறார்களே என, சொல்லாமல் பதில் சொல்லி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top