Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அனாதையாக விடப்பட்ட சவுக்கு..! ஒருத்தன் கூட Support’க்கு வரல..! ஓவரா போன சவுக்கு..!

பிரபல சர்ச்சைக்குரிய அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் சமீப காலமாக அரசியல் குறித்து பல்வேறு விமர்சனங்களை கடுமையாக முன்வைத்து பலரையும் பலரது விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

குறிப்பாக தமிழக அரசு குறித்து அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் அவரது மருமகன் சபரீசன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அடுத்தடுத்து மிகப்பெரிய பூதாகரத்தை கிளப்பி வந்தார்.

இதனால் அரசுக்கு எதிரானவராக அவர் தொடர்ந்து பார்க்கப்பட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு படி மேலே சென்றார்.

சவுக்கு சங்கர்:

உதயநிதி ஸ்டாலின் நடிகை நிவேதா பெத்துராஜுடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும் உதயநிதி அவருக்கு பங்களா முதல் சொகுசு கார் வரை வாங்கிக் கொடுத்ததாக கூறி எல்லை மீறி பேசி தகாத வார்த்தைகளை பேசி முகம் சுளிக்க வைத்திருந்தார்.

--Advertisement--

இதனால் அவர் அவரை கங்கணம் கட்டிக்கொண்டு தமிழக போலீஸ் தமிழக அரசு சுற்றி திரிந்து வந்தது. அந்த வகையில் தற்போது மீண்டும் சமீபத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து மோசமாக பேசினார்.

போலீஸ் அதிகாரியுடன் பெண் போலீஸ் தகாத உறவில் இருப்பதாக கூறி மிகவும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.

அரசாங்கம் குறித்து அதிரடி கருத்துக்கள்:

இதற்கு பல தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் அவரை கைது செய்தது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் அரசு ஆவணங்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அரசியல் சார்ந்த சமூக நலன் சார்ந்து சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களை குறித்து அவர் கருத்துக்களை ஆன்லைன் மற்றும் இணையதளத்தில் கசியவிட்டார்.

சவுக்கு ஷங்கர் அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கருத்துகளை அவர் முன் வைத்தார். ஒரு சில கருத்துக்களை மக்கள் ஆதரித்தார்கள்.

ஆனால், சில கருத்துக்கள் மிகவும் மோசமாக கேட்க கூடாத அளவுக்கு அவருக்கு ஆதரித்தால் அதற்கு நாமும் துணை போகிறோம் என்று ஆகிவிடும் என்பதால் மக்கள் விலகி விட்டனர் .

போலீசார் குறித்து அவதூறு பேச்சு:

அப்படித்தான் தற்போது போலீஸ் பெண் போலீஸ் மற்றும் போலீஸ் சார் விவகாரம் சூடு பிடித்திருக்கிறது. அவரது கருத்துக்களை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் பேசலாம் என்பது போன்று பத்திரிகையாளரின் சுதந்திரத்தை கையில் எடுத்து காலில் போட்டு மிதித்திருக்கிறார் சவுக்கு சங்கர் என பலர் அவரை கடுமையாக விமர்சித்து தள்ளியுள்ளனர்.

சவுக்கு சங்கர் பல்வேறு அரசியல் சார்ந்த தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக கூறி இருக்கிறார் என்றாலும் கூட சமீபத்தில் காவல்துறை அதிகாரி அருண் என்பவரையும் சில பெண் காவல் அதிகாரிகளையும் இணைத்து பேசிய விஷயத்தை அவர் தவிர்த்து இருக்க வேண்டும்.

அது கேட்பதற்கு நல்லா இல்லை நன்றாக இல்லை ஏன் இப்படி பேசினார் என்றும் தெரியவில்லை. இதுதான் அனைவருடைய கருத்தாக இருக்கிறது.

இதனால் சவுக்கு சங்கர் தற்போது அனாதையாக விடப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக பேசப்போனால் அவர் சொன்ன கருத்துக்கு நாம் ஒத்துழைப்பு போல ஆகிவிடும் தவறாக போய்விடும் என்பதால் சவுக்கு சங்கரை யாரும் ஆதரிக்கவில்லை.

அவர் அனாதையாக விடப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு நெருக்கமான சில பத்திரிகையாளர்கள் மட்டும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே சவுக்கு சங்கருக்கு ஆதரவான நிலைப்பாடு எதிரான நிலைப்பாடு என்பதை தாண்டி குறிப்பிட்ட சில பெண் காவலர்களின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதை ஏற்றுக்கொள்ள யாருமே தயாராக இல்லை.

அவர்கள் காவலர்கள் என்பது தாண்டி பெண்களை அவர் இழிவாக சித்தரிக்கும் விதமாக பேசியதை யாருமே.. ஆதரிக்க மாட்டார்கள்.

இதன் காரணமாகத்தான் சவுக்கு சங்கர் அனாதையாக விடப்பட்டிருக்கிறார் என பேசியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top