Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

” பித்ரு தோஷம் நீங்க தும்பை பூ மாலை..!” – உடனே சிவனுக்கு போடுங்க..!!

இந்த உலகத்தை காப்பதற்காக ஈசன்  ஆலகால விஷத்தை அருந்திய போது அதை உள்ளே செல்ல விடாமல் உமையாள் தடுத்தாள். எனவே தான் நீலகண்டன் என்ற பெயர் ஏற்பட்டது என்பதோடு அந்தக் காலமே பிரதோஷ காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பிரதோஷ காலமானது மாலை நேரத்தில் 4:00 மணி முதல் 6:00 மணி வரை சாஸ்திர ரீதியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வேளையில் சிவனுக்கு சிவன் கோவில் மட்டும் அல்லாமல் நந்தி தேவர் இருக்கும் இடத்தில் மிகச் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

அதுமட்டுமல்லாமல் சனிப்பிரதோஷத்திற்கும் செவ்வாய் பிரதோஷத்திற்கும் மிகச் சிறப்புக்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்த நாட்களில் நந்தி தேவனுக்கு மட்டுமல்லாமல் சிவனுக்கும் செய்கின்ற அர்ச்சனைகள் மற்றும் அபிஷேகத்தால் எண்ணற்ற நன்மைகள் மக்களுக்கு கிடைக்கிறது.

எனவே தான் சனி பிரதோஷத்தை போலவே செவ்வாய்க்கிழமை அன்று வருகின்ற பிரதோஷத்திற்கு கட்டாயம் நீங்கள் சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு இருக்கும் நந்தி தேவருக்கும், சிவலிங்கத்திற்கும் சிறப்பான அபிஷேகங்கள் நடக்கும்.

அதில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் நினைப்பதை நடக்க அவர்களிடம் உங்கள் வேண்டுதல்களை மனதார வேண்டுங்கள்.இந்த பிரதோஷ காலங்களில் வில்வ இலை எவ்வளவு மகிமை இருக்கிறதோ அதுபோல நீங்கள் தும்பைப் பூவை கொண்டு மாலையை கட்டி சிவபெருமானுக்கு போடுவதின் மூலம் ஏழு ஜென்மங்களாக நீங்கள் செய்து வந்த பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதோடு பித்ரு தோஷமும் நீங்குவதாக வேதங்கள் கூறுகிறது.

--Advertisement--

 எனவே கட்டாயம் செவ்வாய்க்கிழமை ஏற்படுகின்ற பிரதோஷத்த தினத்தில் நீங்கள் மறவாமல் சிவன் கோயிலுக்கு செல்வதை கட்டாயம் ஆக்கிக் கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு செவ்வாய் தோஷத்தால் ஏற்படுகின்ற ரண சிகிச்சைகளும் தடுக்கப்பட்டு அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

எனவே செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்ட இருப்பவர்கள் செவ்வாயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்,  கட்டாயம் செவ்வாய் பிரதோஷத்தை அனுஷ்டித்தாலே போதும் ஈசனின் பரிபூரண அருள் கிடைப்பதால் செவ்வாயின் தாக்குதலில் இருந்து  தப்பித்து கொள்ள முடியும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top