Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பிரியாமணி

எகிறி குதிக்குது முன்னழகு..! நடுகாட்டில் குத்தாட்டம் போட்ட பிரியாமணி..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமா ரசிகர்களை அழகால், நடிப்பால் வசீகரித்தவர் பிரியாமணி(Priyamani) இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில், ‘கண்களால் கைது செய்’ என்ற படத்தில், தமிழ் சினிமாவில் புதுமுக நாயகியாக பிரியாமணி அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம்,தெலுங்கு கன்னடம், இந்தி என பல மொழிகளில், பிரியாமணி நடித்து வருகிறார். பெங்களூருவைச் சேர்ந்த பிரியாமணி, பள்ளியில் படிக்கும் நாட்களில் சிறந்த விளையாட்டு வீராங்கணையாக பல பரிசுகளை வென்றிருக்கிறார். அவரது அம்மா, ஒரு பேட்மின்டன் விளையாட்டு வீராங்கணையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Priyamani

பிரியாமணி சிறந்த நடனக்கலைஞர். சிறுவயதில் இருந்தே, நடனத்தில் அதிக ஆர்வம் காட்டி, முறையாக பயிற்சி பெற்றுள்ளார். பள்ளி நாட்களில் நாளிதழ் விளம்பரங்களில் பிரியாமணி நடித்து, விதவிதமாக போஸ் தந்துள்ளார். பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் நடித்த போது, பிளஸ் 2 மாணவியாக பிரியாமணி இருந்துள்ளார்.

இவரது பிரியா வாசுதேவ் மணி ஐயர். அதில் இருந்து, பிரியாமணி என பாரதிராஜா மாற்றியுள்ளார். இயக்குநர் அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்ததற்காக, தேசிய விருது பெற்றார் பிரியாமணி. இவர், சிறந்த நடிகை மட்டுமல்ல, மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார்.

Priyamani

பருத்திவீரன் படத்தை தொடர்ந்து பாலு மகேந்திராவின் இயக்கத்தில் அது ஒரு கனா காலம், விஷாலுடன் மலைக்கோட்டை மற்றும் தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ரத்த சரித்திரம், ராவணன், சாருதலதா என பல படங்களில் பிரியாமணி நடித்திருக்கிறார்.இப்போது இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கஸ்டடி, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களில், பிரியாமணி நடித்து வருகிறார்.

--Advertisement--

Priyamani

பிரியாமணி தமிழில் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அந்த படங்களில் நிறைவான நடிப்பை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சாருலதா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். நினைத்தாலே இனிக்கும் படத்திலும், மலைக்கோட்டை படத்திலும் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். அது ஒரு கனா காலம் படத்தில், வீட்டு வேலை செய்யும் வேலைக்கார பெண்ணாகவும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Priyamani

பருத்தி வீரன் படத்தில், கதையின் நாயகன் பருத்திவீரன் மீது காதல் கொண்ட முத்தழகு கேரக்டரில் பிரியாமணி வாழ்ந்திருப்பார். அந்த படத்தில், கதை நாயகனுக்கு இருந்த அதே முக்கியத்துவம், கதை நாயகிக்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் படத்தின் இறுதிகட்ட காட்சியில், பிரியாமணி நடிப்பு தேசிய விருதை பெறும் அளவுக்கு மிக சிறப்பானதாக இருந்தது.

Priyamani

நடிகர் சிவக்குமாரின் மகன் கார்த்திக்கு இது முதல் படம் என்றாலும், அறிமுக நாயகன் போல் இல்லாமல், அனுபவம் மிக்க ஒரு சிறந்த நடிகராக, தன்னுடைய கேரக்டரை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருப்பார் கார்த்தி. இதுவே, கார்த்தியின் அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புக்காக நுழைவுச்சீட்டாக அமைந்தது. இன்று மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில், வந்தியத்தேவனாக நடிக்கும் அளவுக்கு, கார்த்தி முன்னேற்றம் கண்டிருக்கிறார்.

Priyamani

தமிழ் சினிமாவை பொருத்தவரை, நல்ல நடிகைகளுக்கு வாய்ப்பு அவ்வப்போது இல்லாமல் போனாலும் மீண்டும் மீண்டும் ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கு நல்ல நல்ல பட வாய்ப்புகள் அமையும். அந்த வகையில், தேசிய விருது பெற்ற முத்தழகு பிரியாமணிக்கு ஜவான் மற்றும் கஸ்டடி படங்கள், மீண்டும் அவரது திறமையை வெளிப்படுத்த மிகச்சிறந்த படங்களாக அமைந்து மீண்டும் அவர் தமிழில் ஒரு ரவுண்டு வர வாய்ப்புள்ளது.

Priyamani

அம்மணி, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக உள்ளதால் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் ஸ்டில்களை அப்டேட் செய்கிறார். இது, அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தருகிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top