பாத்திங்களா..? செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல.. நடிகை பிரியங்கா மோகன் வெள்ளந்தி பேச்சு..! - பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

பாத்திங்களா..? செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல.. நடிகை பிரியங்கா மோகன் வெள்ளந்தி பேச்சு..! – பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டு கன்னட படத்தில் படத்தில் அறிமுகமானதை அடுத்து தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

பிரியங்கா மோகன்..

நடிகை பிரியங்கா மோகன் தமிழில் 2021 ஆம் ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனோடு முதல் முதலில் இணைந்து நடித்தார். ஆரம்பப் படமே கலக்கலான முன்னனி ஹீரோவோடு நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததால் அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திய இவர் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

பாத்திங்களா..? செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல.. நடிகை பிரியங்கா மோகன் வெள்ளந்தி பேச்சு..! - பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
இதனை அடுத்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் சூர்யாவோடு இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முன்னணி தமிழ் நடிகையாக மாற முயற்சி செய்தார்.

அந்த வகையில் இந்த படம் அதிகளவு வசூலை தந்ததை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனோடு இணைந்து டான் படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்திய இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

வெள்ளந்தி பேச்சு..

அண்மையின் இவர் தனுஷோடு இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். 2024 பொங்கல் வெளியீடாக வெளி வந்த இந்த படத்தைப் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தது.

ஹாலிவுட் லெவலின் சண்டை காட்சிகளோடு வெளி வந்த கேப்டன் மில்லர் திரைப்படம் வித்தியாசமான கதை அம்சம் நிறைந்த படமாக இருந்தாலும் ரசிகர்கள் பெரிதளவு இந்த படத்திற்கான வெற்றியை தரவில்லை.

பாத்திங்களா..? செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல.. நடிகை பிரியங்கா மோகன் வெள்ளந்தி பேச்சு..! - பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
இந்த படத்திலும் பிரியங்கா மோகன் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கும் போது துப்பாக்கியை எப்படி பிடிக்க வேண்டும் என்பது கூட தெரியாது என்று படத்தின் வெளியீட்டு விழாவில் பேசியது கடுமையான அதிர்வுகளை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியது.

மேலும் தனக்கு துப்பாக்கியை பிடிக்க கற்றுக் கொடுத்ததே நடிகர் தனுஷ் தான் என்று பேசியதை அடுத்து மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த சக நடிகர்கள் நமட்டு சிரிப்பு சிரித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பார்த்தீர்களா? செல்லத்துக்கு ஒன்றுமே தெரியல.. எவ்வளவு வெள்ளந்தியா? இருக்காங்க.. என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த பதிவுகளை பார்த்த நடிகை பிரியங்கா மோகன் தன்னை ரசிகர்கள் அனைவரும் பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார். மேலும் இவரது வெள்ளந்தி தானமான பேச்சு ரசிகர்கள் பலராலும் ரசிக்கும்படி உள்ளது என கூறலாம்.

பாத்திங்களா..? செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல.. நடிகை பிரியங்கா மோகன் வெள்ளந்தி பேச்சு..! - பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
முதல் படத்திலிருந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்து வரக்கூடிய பிரியங்கா மோகன் விரைவில் தமிழில் முன்னணி நடிகையாக கூடிய வாய்ப்புகள் அதிகளவு உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அத்தோடு இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்து இருப்பதால் தமிழ் திரை உலகின் ராசியான நடிகை என்ற பெயரும் இவருக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பிரியங்கா மோகனின் வெள்ளந்தி பேச்சு பிரபலமாக பலர் மத்தியிலும் பேசக்கூடிய பேசும் பொருளாக மாறிவிட்டது.