தற்போது சினிமாவை கலக்கும் நடிகர் R சுந்தர் ராஜனின் இரண்டு மகன்கள் இந்த சினிமா பிரபலங்களா..?

தற்போது சினிமாவை கலக்கும் நடிகர் R சுந்தர் ராஜனின் இரண்டு மகன்கள் இந்த சினிமா பிரபலங்களா..?

திரை உலகைப் பொருத்த வரை இயக்குனர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத இயக்குனர் ஆகவும் நடிகராகவும் திகழ்ந்த ஆர் சுந்தர்ராஜன் இது வரை எந்த ஒரு குறும்படத்தையும் இயக்கியது இல்லை. அது மட்டும் அல்லாமல் எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்ற வில்லை.

இதையும் படிங்க: காதலிச்சேன்… ஆனா, கல்யாணம் பண்ணிக்க முடியல.. இது தான் காரணம்.. நடிகை மும்தாஜ் ரகசிய பக்கங்கள்..!


இவர் 1980 களில் இருந்து 1990 வரை திரைப்பட தயாரிப்பாளராக செயல்பட்ட இவர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் தனது திரையுலக வாழ்க்கையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன்..

திரைப்படங்களை இயக்குவதோடு நின்றுவிடாமல் பன்முக திறமையை கொண்ட இவர் திரைப்படங்களுக்கான மிகச் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்திருக்கிறார். இவர் 1982 ஆம் ஆண்டு இயக்கிய பயணங்கள் முடிவதில்லை படம் இவருக்கு மிகச்சிறந்த பெயரை பெற்றுத்தந்தது.

இதனை அடுத்து 1984-இல் வைதேகி காத்திருந்தாள் 1989-இல் ராஜாதி ராஜா மற்றும் 1992-இல் திருமதி பழனிச்சாமி போன்ற படங்களை அற்புதமான ரசிகர்கள் ரசிக்கும்படி தந்திருக்கிறார்.


இந்நிலையில் இவருக்கும் மைக் மோகனுக்கும் ஒரு மிக நல்ல புரிதல் இருந்ததன் காரணத்தால் அவரோடு இணைந்து தூங்காத கண்ணற்று ஒன்று, சரணாலயம், நான் பாடும் பாடல், குங்குமச்சிமிழ், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவரும் மோகனும் இணைந்த படங்கள் முழுவதுமே பாக்ஸ் ஆபீஸ் கிட்டை பெற்று தந்தது.

இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கிய முதல் படமான நானே ராஜா நானே மந்திரி படத்திற்கு திரைக்கதையை எழுதி இருந்தார். இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்திருந்தார்.

சுந்தர்ராஜனின் இரண்டு மகன்கள்..

மேலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தையும் நகைச்சுவை வேடத்தையும் ஏற்று நடித்து வரும் இவருக்கு மூன்று மகன்கள் தீபக் சுந்தர்ராஜன், கார்த்திக் சுந்தர்ராஜன், அசோக் சுந்தர்ராஜன் இருக்கிறார்கள். இதில் இரண்டு மகன்கள் தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நபர்களாக திகழ்கிறார்கள்.


இதில் தீபக் சுந்தர்ராஜன் தனது தந்தையைப் போலவே மிகச் சிறந்த இயக்குனர். மேலும் அசோக் சுந்தர்ராஜன் சிறந்த நடிகராக திகழ்கிறார். இதில் தீபக் சுந்தர்ராஜன் விஜயசேதுபதியை வைத்து திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

மேலும் அசோக் சுந்தர்ராஜன் சித்திரையில் நிலா சோறு என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆர் சுந்தர்ராஜன் இந்த இரண்டு மகன்களையும் சினிமாவில் மிகப்பெரிய லெவலுக்கு கொண்டுவர வேண்டும் என்று களம் இறக்கினார்

.
இதனை அடுத்து இவர்கள் இருவரது முதல் படமும் முதல் இயக்கமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. எனினும் இது சினிமாத்துறையில் சகஜம் தான் என்று இன்னும் முயற்சியை கைவிடாமல் ஊக்கத்தோடு முயற்சி செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: உண்மையான பெண்கள் இதை பண்ணுவாங்க.. முதலிரவு அறையில் அந்த கோலத்தில் பிரியங்கா நல்காரி..


இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் விரைவில் இந்த இரண்டு மகன்களும் சினிமாவில் ஜொலிப்பார்கள் என்று அவருக்கு ஊக்கம் தரக்கூடிய வார்த்தைகளை சொல்லி இருப்பதோடு இவர்கள் குடும்பத்தின் பின்புலத்தை அறிந்து கொண்டு அவர்களின் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து இருக்கிறார்கள்.

பொதுவாகவே சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிக அளவு காணப்படுகின்ற வேளையில் வாரிசு நடிகராக இருந்தாலும் சினிமா துறையை பொறுத்த வரை வெற்றி பெறுவது அவருடைய அதிர்ஷ்டம் மற்றும் உழைப்பை மட்டுமே சாரும் என்பது இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.