Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ரசகுல்லா

“வீட்டிலேயே சூப்பரான பஞ்சு போன்ற ரசகுல்லா..!” – பார்க்கும்போதே எச்சில் ஊரும்..!

எவ்வளவு காரம் சாப்பிட்டாலும் இனிப்பு சாப்பிட்டதை போல இருக்காது. அதிலும் குறிப்பாக ரசகுல்லா – வை பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும். இந்த ரசகுல்லாவை உங்கள் வீட்டில் எளிய முறையில் எப்படி செய்வது என்பது பற்றிய பதிவை தான் இந்த சமையல் பக்கத்தில் பார்க்கப் போகிறோம்.

Rasgulla

வீட்டிலேயே ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்

1.கொழுப்பு நீக்கப்படாத பால் ஒரு லிட்டர்

2.எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்

3.சர்க்கரை 3 கப்

4.தண்ணீர் ஐந்து கப்

--Advertisement--

செய்முறை

Rasgulla

முதலில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கொழுப்பு நீக்கப்படாத பாலை ஊற்றி சூடாக்க வேண்டும். இந்த பால் கொதித்து வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, பாலில் எலுமிச்சை சாறை கலந்து விடுங்கள்.

இதனை அடுத்து பால் திரிந்து விடும். பால் திரிந்த பின்பு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடித்த இந்த பொருளை நீங்கள் குளிர்ந்த நீரில் கழுவி விடவும். பின்னர் எலுமிச்சை பழ புளிப்பு சுவை நீங்கும் வரை கழுவுவது மிகவும் நல்லது.

Rasgulla

பின்னர் இந்த திரிந்த பொருளை நீங்கள் வெள்ளைத் துணியில் கட்டி அதில் இருக்கும் நீர் முழுவதும் வெளியேறும் வரை மேலே கட்டி தொங்க விட வேண்டும். இதனை அடுத்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு நீங்கள் அந்த பொருளை எடுத்து உங்கள்  கைகளால் தேய்த்து நன்கு மென்மையாகும் வரை பிசியுங்கள்.

இப்படி பிசைந்த பிறகு அதை நன்கு மாவு போல் உருட்டி பிறகு சிறு சிறு உருண்டைகளாக மாற்றி ஒரு தட்டத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் நீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இது கொதித்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இதில் உருண்டைகளை போட்டு 10 நிமிடங்கள் மூடவிட்டு மீண்டும் அடுப்பை பற்ற வைத்து வேக விடவும்.

Rasgulla

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் அடுப்பை அணைத்துவிட்டு சூடு தணிந்த பின்பு வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஐந்து லிருந்து 6 மணி நேரம் அப்படியே குளிர வைத்துவிட்டு அதன் பிறகு எடுத்து சாப்பிட்ட சூப்பரான பஞ்சு போன்ற ரசகுல்லா ரெடி.

குறிப்பு : பாலில் க எலுமிச்சம் பழ சாறினை கலக்கும் போது கொட்டைகள் விழாதபடி கலக்க வேண்டும். அப்படி விழுந்து விட்டால் கசப்புத் தன்மையை எற்பட்டு விடும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top