இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற ட்ரெஸ்-ஸா இது..? – அலற விடும் நடிகை ராதா..!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர் ராதா(radha) கடந்த 1980– 90களில் இவர்தான், தமிழ் சினிமாவின் ஆஸ்தான நாயகி. எந்த கேரக்டராக இருந்தாலும், ராதா கால்ஷீட் கிடைக்குமா? என்பதுதான் இயக்குநர், தயாரிப்பாளரின் பிரதான கேள்வியாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நாயகிகளில் ராதா முக்கியமானவர்..

அந்த காலகட்டத்தில் திருமணத்துக்கு பெண் தேடிய பலரும், ‘ கல்யாணத்துக்கு பார்க்கற பொண்ணு ராதா மாதிரி இருந்தால் பாருங்க,’ என்று கூறுவது கூட சகஜமாக இருந்தது. ஏனெனில், அந்த அளவுக்கு ராதா, அழகாக அனைவருக்கும் தெரிந்தார். மேலும், அவரது கலகலப்பான பேச்சும், பார்வையும், நடிப்பும் அவரை விரும்பாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு, மனதளவில் நெருங்கியவராக இருந்தார். பலரும், தங்களது பெண் குழந்தைகளுக்கு ராதா என பெயரிட்டனர்.

ராதா

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில், அலைகள் ஓய்வதில்லை ராதாவின் முதல்படம். நவரச நாயகன் கார்த்திக் தான் இதில் ஜோடி. பிராமண வீட்டு பையனாக கார்த்திக்கும், கிறிஸ்துவ வீட்டுப்பெண்ணாக ராதாவும் நடித்த இந்த படம், இன்றும் ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவாக நிற்கிறது.

தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ், பிரபு, மோகன் என அப்போது இருந்த அத்தனை ஹீரோக்களுக்கும் ஜோடியாக ராதா நடித்தார். முதல் மரியாதை படத்தில், ஓடையில் பரிசல் ஓட்டும் குயிலு கேரக்டரில், சிவாஜி கணேசனை நேசிக்கும் ஒரு கேரக்டரில் நடித்த ராதாவின் நடிப்பு இன்றும் ரசிக்கப்படுகிறது. நிறைய பாராட்டுதல்களை பெறுகிறது.

ராதா

இப்போது, சினிமாக்களில் ராதா நடிப்பதில்லை. பிரபல டிவி சேனல்களில், விருந்தினராக கலந்துகொள்கிறார். நடுவராகவும் பங்கேற்று, நிகழ்ச்சியை மெருகேற்றுகிறார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ள ராதா, தனது மலரும் நினைவுகளாக சினிமா கால நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் ஜெயலலிதா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இது, ரசிகர்களின் லைக்ஸ் அள்ளுகிறது.

ராதா

அதுமட்டுமின்றி, ராதாவின் உடன்பிறந்த சகோதரிதான் அம்பிகா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவரும், தங்கை ராதா கொடி கட்டிப்பறந்த காலகட்டத்தில் முன்னணியில் இருந்த ஒரு நடிகை. ராதாவும், அம்பிகாவும் காதல் பரிசு என்ற படத்தில், அக்கா – தங்கை கேரக்டர்களிலேயே நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஹீரோ கமல்தான்.

ராதா

அம்பிகாவும் அனைத்து ஹீரோக்களும் ஜோடியாக நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என பலருக்கும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். ரஜினி, கமல் நடித்த பல வெற்றிப்படங்களின் நாயகி அம்பிகா தான்.

உதாரணமாக கமலுடன் காக்கிச்சட்டை, ரஜினியுடன் படிக்காதவன், மிஸ்டர் பாரத், கமலுடன் உயர்ந்த உள்ளம், சகலகலா வல்லவன், ஜப்பானில் கல்யாண ராமன், ரஜினியுடன் மாவீரன் என பல வெற்றிப் படங்களை பட்டியலிடலாம்.

ராதா

ராதா பதிவிடும் மலரும் நினைவுகள் படங்களில் ராதாவின் சகோதரி அம்பிகாவும் சிலவற்றில் உடன் இருக்கிறார். அக்கா – தங்கை இருவரும் அவ்வப்போது எடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களையும் ராதா, தனது வலைதள பக்கத்தில் உடனடியாக அப்டேட் செய்து விடுகிறார். இதனால், ராதாவின் புகைப்படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.