Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“சுவையான ரவா தேங்காய் பர்பி..!” – இப்படி செஞ்சு பாருங்க பிரண்ட்ஸ்..!!

திடீரென்று இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் உங்கள் வீட்டில் இருக்கும் ரவா தேங்காவைக் கொண்டு நீங்களே மிக சூப்பரான ரவா தேங்காய் பர்பி செய்து அசத்தலாம்.

ரவா தேங்காய் பர்பி குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்வீட்டாக இருக்கும்.இனி இந்த ரவா தேங்காய் பர்பியை எப்படி செய்யலாம் என்பதை இப்போது படிக்க தெரிந்து கொள்ளலாம்.

 ரவா தேங்காய்  பர்பி செய்ய தேவையான பொருட்கள்

1.தேங்காய் ஒரு முடி துருவியது

2.ரவை 100 கிராம்

3.சர்க்கரை 250 கிராம்

--Advertisement--

4.நெய் 100 மில்லி

5.உருவிய பாதம் ஐந்து

6.முந்திரி 10 முதல் 15

 செய்முறை

முதலில் முத்திய தேங்காய் ஒன்றினை எடுத்து நன்கு துருவி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு இந்த நெய் விட்டு அடுப்பை பற்ற வைக்கவும்.

 நெய் உருகிய பின்பு நீங்கள் துருவி வைத்திருக்கும் தேங்காய் போட்டு மிதமான தீயில் நன்கு கிளறி எடுத்து ஒரு தட்டத்தில் வைத்துக் கொள்ளவும்.

மீண்டும் நீங்கள் சிறிது அளவு நெய் விட்டு அது உருகிய பிறகு எடுத்து வைத்திருக்கும் ரவையை அதில் போட்டு மூன்று நிமிடங்கள் நன்கு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 இப்போது அதே வாணலியில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையை போட்டு அதில் சிறிதளவு நீரை ஊற்றி சர்க்கரை நீரில் நன்கு கரையும் படி பார்த்துக் கொள்ளவும்.

 அப்படி சர்க்கரை நன்கு கரைந்த பின் ஒரு கம்பி பதத்திற்கு வந்த பிறகு அதோடு ரவை மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது மீதி இருக்கும் நெய்யை விட்டு அந்த கலவையை நன்கு பிரட்டி விடவும்.

 இதனை அடுத்து ஒரு தட்டத்தில் சிறிதளவு நெய்யை அடியில் நன்கு தேய்த்து விடுங்கள் அந்த தட்டத்தில் பருப்பியை கொட்டி அப்படியே நீங்கள் துண்டு போட்டுக் கொள்ளலாம்.

 அதுவும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவங்களில் துண்டு போடவும் துண்டு போடுவதற்கு முன்பு கத்தில் நெய்யை நன்றாக தேய்த்துக் கொண்டால் எளிமையான முறையில் துண்டு போட முடியும்.

 இப்போது வாணலியில் இருக்கும் அந்த கலவையை நீங்கள் தட்டத்திற்கு மாற்றி விடுங்கள். இந்த கலவை நன்கு சூட்டை தவிர்த்து குளிர வேண்டும். குளிர்ந்த உடன் நீங்கள் கத்தியை பயன்படுத்தி அதில் உங்கள் விருப்பமான படி வெட்டி எடுக்கலாம்.

 அப்படி வெட்டி அடிப்பதற்கு முன்பு நீங்கள் துருவி வைத்திருக்கும் பாதாம் மற்றும் முந்திரியை அதன் மேல் போட்டு அழுத்தம் கொடுத்து விடுங்கள்.

இப்போது பர்பி என் மேல் ஒட்டிக் கொள்ளும் இதன் பின்னர் நீங்கள் துண்டுகளைப் போட்டு உண்ணலாம். இப்போது உங்கள் மனதிற்கு பிடித்த சுவையான ரவா தேங்காய் பர்பி தயார்.

Continue Reading
 

More in

Trending Now

To Top