Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பாக்க மட்டும் தான் சினேகா.. ஆனா, பண்றது எல்லாம் சிலுக்கு வேலை…” – சூடேற்றும் ரவீனா தாஹா..!

 ஜில்லா, புலி, ரட்சகன் உட்பட்ட பல படங்களில் நடித்திருக்கும் ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு ஆரம்ப நாட்களில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

 சின்னத்திரை சீரியல்களில் களைகட்டி நடித்து வரும் இவர் விஜய் டிவியின் மௌனராகம் 2 தொடரில் ஹீரோயினியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்டவர்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வண்ண வண்ண உடைகளை அணிந்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

 இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே ரவீனாவிற்கு ஒரு கூட்டம் உள்ளது என்று சொல்லலாம். இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார்கள் என்று அவர்கள் காத்திருப்பார்கள் அதுமட்டுமல்லாமல் இவர்  துள்ளலான நடனம் ஆடிய வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பாக பேசப்படுவார்.

[irp posts=”62128″ ]

--Advertisement--

தற்போது மௌன ராகம் 2 சீரியல் விரைவில் முடிவடையக் கூடிய நிலையில் உள்ளது. எனவே விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான குக் வித் கோமாளி சீசன் நான்கில் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 மேலும் இந்த சீசனில் ஜிபி முத்து உள்ளிட்டோர் களம் இறங்க இருப்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சரியான முறையில் சூடாக, சுவையோடு இருக்கும் என்று பலராலும் எதிர்பார்ப்புடன் எப்போது இந்த நிகழ்ச்சி வரும் என்று காத்திருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க போவதை எடுத்து ரசிகர்கள் முன்கூட்டியே இவருக்கு ஏகோபித்த வரவேற்பை அளித்திருப்பதோடு மட்டுமல்லாமல் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் வாரி குவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத ரவீனா இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர் அடிக்கும் லூட்டிகளும் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகும்.

 அதுமட்டுமல்லாமல் டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக்கொள்ள இவர் பெரிதும் உதவுவர் என்று விஜய் டிவி கணக்கிட்டு இருக்கிறதா என்று ரசிகர்கள் தங்களுக்குள் பேசி சொல்கிறார்கள்.

இது எப்படியோ ஜிபி முத்துவும் இவரும் சேர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஒரு தரமான நிகழ்ச்சியாக அனைவரையும் பார்க்க வைப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

[irp posts=”62469″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top