எப்படிமா..? கிரிஷ் என்ன பண்ணிட்டான்.. விவாகரத்து பண்ற அளவுக்கு.. சங்கீதா வாழ்க்கையில் இறங்கிய இடி..!

தமிழ் திரையுலகில் பாலா நடித்த படத்தில் கஞ்சா விற்கும் பெண்ணாக தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சங்கீதா மிகச்சிறந்த பின்னணி பாடுகியாகவும் இருக்கிறார்.

திரைப்படங்களில் யாருமே நடிக்க விரும்பாத வித்தியாசமான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் கை தேர்ந்தவர். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த உயிர், பிதாமகன், தனம் போன்ற படங்கள் இன்று வரை இவர் பெயர் சொல்லும் படி உள்ளது.

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக செயல்பட்ட இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்வுகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார்.

இவர் பிரபல பின்னணி பாடகரான கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருக்கும் சில நடிகைகளை போல இல்லாமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து சங்கீதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட சங்கடமான அனுபவங்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் பேசும் போது தனது மாமியார் இவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்கள் என்பதை பதிவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து ஒரு நாள் வீட்டுக்கு வராமல் போன் மூலம் நான் உன்னிடம் ஒன்று கேட்டால் மறைக்காமல் பதில் சொல்ல வேண்டும். மேலும் கோபம் ஏற்படக்கூடாது என்று பீடிகையை போட்டு எதிர்பார்த்தாத அந்த கேள்வியை கேட்டார்.

அந்தக் கேள்வியை அவர் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் கேட்ட கேள்வி நீயும் கிரிஷ்வும் விவாகரத்து செய்யப் போகிறீர்களா? இதைக் கேட்ட உடன் திடீர் என அவர் ஏன் இப்படி கேட்கிறார் என்று பலவிதமான எண்ணங்கள் எனக்குள் தோன்றியது.

என் மனநிலையை ஒருவாறு சமாளித்தபடியே அவரிடம் ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று கேட்க, பத்திரிகைகளில் போட்டு இருக்கு அதனால் தான் கேட்டேன் என்று அவர் பளிச் சென்று பதில் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து எவனோ கற்பனைக்கு எதை எதையாவது போட்டு இருந்தால் அதை நீங்கள் நம்புகிறீர்களா? என்று அவரை சமாதானம் செய்த நான் அப்போது தான் மீடியாவின் சக்தி என்ன என்பதை உள்ளூர புரிந்து கொண்டேன் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இளைஞர்களின் மத்தியில் பரவி அட இப்படி எல்லாம் மீடியாக்களால் ஒரு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற கோணத்தை சிந்தித்து வருகிறார்கள்.