கமல் ஹாசனுக்கு ஆதரவாக பேசிய பிக்பாஸ் முத்துக்குமரன்.. சொன்ன அந்த வார்த்தை.. விளாசும் ரசிகர்கள்!
நடிகர் கமல்ஹாசன், ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்” என்று கூறிய கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கன்னட ரக்ஷண வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் பெங்களூருவில் போராட்டம் நடத்தி, ‘தக் லைஃப்’ படத்தின் விளம்பர பதாகைகளைக் கிழித்து, படத்தை கர்நாடகாவில் திரையிடத் தடை செய்ய வேண்டும் எனக் கோரின. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர், ஆனால் கமல், “அன்பு மன்னிப்பு கேட்காது” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் இந்த விவகாரம் குறித்து ஒரு காணொளி வெளியிட்டார். அதில், “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மாட்டார், ஏனெனில் இது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை இல்லை. இது தமிழ் மொழிக்கான பிரச்சனை, தமிழர்களின் பிரச்சனை” என்று கூறினார். இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியது. ரசிகர்கள் முத்துக்குமரனை கடுமையாக வ...