பெரியார் குத்து என்று பாடல் பாடிய சிம்புவா இது..? - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்


நடிகர் சிம்பு நடிக்கவேண்டிய "மாநாடு" திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ட்ராப் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு சமரசம் ஆகி தற்போது மீண்டும் படம் துவங்கவுள்ளது. 

இந்நிலையில் தற்போது சிம்பு ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார். அவர் ஐயப்ப சாமிக்கு மாலை போட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. 

மேலும் மாநாடு அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு, பாடலாசிரியர் வைரமுத்துவின் மகனான மதம் கார்க்கி எழுதிய "பெரியார் குத்து" என்ற பெரியார் குறித்து பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இதன் முலம் தன்னை ஒரு பெரியாரிஸ்ட் ரேஞ்சுக்கு காட்டிக்கொண்ட சிம்பு இப்போது சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பெரியாரு குத்து என்று பாடல் பாடிய சிம்புவா இது..? என்று ஷாக் ஆகியுள்ளனர்.




இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.