“நீங்க கட்டாயம் ஃபாலோ பண்ண வேண்டிய ஆன்மீக சாஸ்திர விதிகள்..!” – என்ன பார்க்கலாமா?

முன்னோர்கள் ஆரம்ப நாட்களில் சில கட்டுப்பாடுகளையும், சாஸ்திர விதிகள் போன்றவற்றை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்கள். இதன் மூலம் பல நன்மைகள் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதைத்தான் நமக்கும் கூறி அதை பின்பற்றும்படி சொல்லி இருக்கிறார்கள்.

shastra Tips

 எனினும் நாம் பகுத்தாயாமல் அதனை மூடநம்பிக்கை என்ற பெயரில் தவிர்த்து வருகிறோம். அது மிகவும் தவறு. அவர்கள் அனுபவித்த அனுபவங்களை பகுத்து ஆராய்ந்து அதில் இருக்கும் நன்மை, தீமைகளை புரிந்து கொண்டு தான் நமக்கு சாஸ்திரங்களாக தந்திருக்கிறார்கள்.

ஆன்மீக சாஸ்திர விதிகள்

புதிதாக திருமணம் நடைபெற்று இருக்கும் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் காது குத்தும் சடங்கை செய்யக்கூடாது.

shastra Tips

அதுபோலவே பூணூல் போடும் வழக்கம் இருப்பவர்கள் திருமணம் முடிந்த வீட்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆவது பூணூல் போடாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.

புதிய வீட்டில் குடி புகுபவர்கள் அவர்கள் குலதெய்வத்துக்கு என்று ஒரு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் அவசியம். குலதெய்வத்தை நம்பி புதிய வீட்டுக்கு நீங்கள் சென்றதாக நினைத்து வழிபட்டு வந்தால் வீட்டில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கி நன்மை கிடைக்கும்.

--Advertisement--

மேலும் சிலரின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று முக்கியமான காரியங்களை செய்யும் போது வெற்றி கிடைக்கும். குறிப்பாக புதிதாக கல்வி பயிலுதல், சொத்துக்கள் வாங்குதல், குழந்தைகளுக்கு உணவு ஊட்டுதல் போன்றவற்றை கூறலாம்.

shastra Tips

அதுபோல ஜென்ம நட்சத்திர தினத்தில் செய்யக்கூடிய செய்யக்கூடாத விஷயம் என்ன எனில் முக சவரம் செய்தல், மருந்து சாப்பிடுதல், கடல் கடந்து பயணங்கள் மேற்கொள்ளுதல் இவற்றை நீங்கள் தவிர்த்தல் நல்லது.

மேலும் மாதப்பிறப்பு அஸ்த நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை போன்ற தினங்களில் நீங்கள் கடனை வாங்க கூடாது. அப்படி கடன் வாங்கும் போது அந்த கடனை உங்களால் திருப்பிக் கட்ட முடியாமல் அது வளர்ந்து கொண்டே செல்லும்.

வீட்டுக்கு புதிதாக பொருட்கள் வாங்கும் போது புதன்கிழமை அன்று வாங்குவது சிறப்பு. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய பொருட்களை தாராளமாக வாங்கலாம். அசுபதி, சுவாதி, திருவோணம், சதய நட்சத்திரங்களில் புதிய பொருட்களை வாங்கும் போது மேலும் யோகம் கிடைக்கும்.