வடக்குல இது பழசு.. தமிழ்நாட்டுல தான் புதுசு.. தன்னை பற்றி ரகசியம் உடைத்த சிம்ரன்..!

வடக்குல இது பழசு.. தமிழ்நாட்டுல தான் புதுசு.. தன்னை பற்றி ரகசியம் உடைத்த சிம்ரன்..!

பிடிச்சிருக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு என்று ஒரு காலத்தில் சிம்ரன் வெறியர்களாக இருந்த தமிழ் இளைஞர்களை பற்றி கூற வேண்டாம். எப்போது கைகளை உயர்த்தி இடுப்பினை நளினமாக ஆட்டி ஆட ஆரம்பித்தாரோ அப்போதே சிம்ரனுக்கு என்று தனி ரசிகர் படை அதுவாகவே அமைந்துவிட்டது.

இடுப்பழகி சிம்ரன்..

தமிழ் சினிமாவை பொருத்தவரை 90 காலகட்டங்களில் டாப் நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். குறிப்பாக இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என கூறலாம்.


தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல், அந்த ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்தவர் நடிகை சிம்ரன்.

இவர் கிட்டத்தட்ட தமிழ் திரை உலகில் சுமார் 20 ஆண்டு காலம் தன்னுடைய நடிப்பு திறனாலும் நடன திறனாலும் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருந்தார். மேலும் விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, பிரசாந்த், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்தவர்.

வாலி படத்தில் அஜித்தோடு சேர்ந்து நடித்திருந்த இவரது நடிப்பை எவராலும் எளிதில் மறக்க முடியாது. அந்த அளவு சூப்பராக இவரது நடிப்பு இருந்தது.

இவருக்கு பிளஸ்சே இவருடைய இடுப்பு தான். எனவே தான் ரசிகர்கள் அனைவரும் இவரை இடுப்பழகி என்ற பட்டத்தோடு அழைத்து வந்தார்கள். இவர் இடையை ஆட்டி நளினத்தோடு ஆடு நடனம் அனைவரையும் கவர்ந்து அனைவரையும் ஐக்கியப்படுத்தியது.


இதனை அடுத்து இவரது கால் சீட் கிடைக்க பல முக்கிய இயக்குனர்கள் காத்திருந்தார்கள் என்று கூறலாம். அந்த அளவு படு பிஸியான நடிகையாக இவர் திகழ்ந்தவர்.

இவர் நடிப்பில் வெளி வந்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் அதிர்ஷ்டமான நடிகையாக பார்க்கப்பட்டார். மேலும் சிம்ரன் படம் ரிலீஸ் என்று தெரிந்தால் இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக தியேட்டருக்கு சென்று விசில் அடித்து படம் பார்த்ததை எவராலும் மறக்க முடியாது.

திரை உலகில் நடிக்கும் போது பல்வேறு கிசுகிசுகளுக்கு ஆளான இவர் திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். மேலும் திருமணத்துக்கு பிறகும் சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன் பெயர் அர்த்தம்..

இந்நிலையில் நடிகை சிம்ரனின் பெயருக்கு என்ன அர்த்தம் என்று இது வரை யாராலும் கணிக்க முடியவில்லை. இதனை அடுத்து சிம்ரன் கொடுத்து இருக்கும் பேட்டி ஒன்றில் இவரது பெயருக்கான அர்த்தத்தை கூறியிருக்கிறார்.

அதாவது இந்த பெயர் வடநாட்டில் மிகவும் பழசு அதாவது அங்கு நிறைய பேர் இந்த பெயரோடு இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த பெயர் புதுசாக உள்ளது என கூறியதோடு தன் பெயரின் ரகசியத்தைப் பற்றி கூறியிருக்கிறார்.


அந்த வகையில் சிம்ரன் என்ற பெயரின் அர்த்தமானது தியானம் என்ற பொருளைக் குறிக்குமாம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பெயருக்கும் இவர் போட்ட ஆட்டத்திற்கும் எந்த விதமான சம்பந்தமே இல்லை என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

தியானத்தை அர்த்தமாகக் கொண்ட சிம்ரனா பல மனதையும் ஆட்டி வித்தவர் என்ற தகவல் தற்போது வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் வடக்குல அது பழசு தமிழ்நாட்டுக்கு தான் புதுசு என்று ரசிகர்களை சொல்ல வைத்து விட்டது.

இப்போது உங்களுக்கு சிம்ரன் என்ற பெயரின் அர்த்தம் என்ன என்பது சிறப்பாக விளங்கி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.