ஷூட்டிங் ஸ்பாட்டில் இளம் நடிகருடன் நடிகை கனிகா அரங்கேற்றிய கூத்து..! – என்னன்னு பாருங்க..!

தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர் கனிகா. பைவ் ஸ்டார் என்ற படத்தில் நடித்து, தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து எதிரி, வரலாறு, பழசி ராஜா, கோப்ரா, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளி்ட்ட பல படங்களில் நடித்தார் கனிகா. இவர் மதுரையைச் சேர்ந்த தமிழ் பொண்ணு. இவரது இயற்பெயர் திவ்யா. சினிமாவி்ற்காக கனிகா என மாறி இருக்கிறார்.பெரிய அளவில் முன்னணி நடிகையாக கனிகா வராவிட்டாலும், அந்த படங்களில் இவரது கேரக்டரை சிறப்பாகவே செய்திருந்தார் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக வரலாறு, பழசி ராஜா படங்களில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

தமிழ் சினிமாவில் நீடித்திருக்க, அழகும் நடிப்புத் திறமையும் இருந்தால் மட்டும் போதாது. அதையும் தாண்டி லக்கும் தேவைப்படுகிறது. லக் இருந்தால் மட்டுமே சில விஷயங்களில் ஜெயிக்க முடியும். குறிப்பாக, நேரம் நன்றாக இருந்தால் மட்டுமே, வாழ்க்கையில் சில நேரங்களில் ஜெயிக்க முடிகிறது. இல்லை எனில், பெரிய வெற்றியாளர்கள் கூட ஒரு கட்டத்தில் ஓரம் கட்டப்பட்டு விடுகின்றனர். அதில், சினிமா துறை முக்கியமானது. மார்க்கெட் இருக்கும்போது நடிகர், நடிகைகளுக்கு அடுத்தடுத்து படங்களில் வாய்ப்பு குவிகிறது. இமேஜ் போய்விட்டால், பட வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது.

சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனால், அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது சின்னத்திரை. அந்த வகையில், கனிகாவும் பெரிய திரையை விட்டு விலகி, சின்னத்திரை நாயகியாக வலம் வருகிறார். எனினும், அவ்வப்போது வரும் சினிமா வாய்ப்புகளையும் அவர் விடுவதில்லை. இப்போது, பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் நாடகத்தில் கனிகா, ஈஸ்வரி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நேற்று முன்தினம், கனிகா வெளியிட்ட ஒரு வீடியோ, டிரண்டிங் ஆகி வேகமாக பரவி வருகிறது. அதாவது எதிர்நீச்சல் ஷூட்டிங் ஸ்பாட்டில், செல்போனை பார்த்தபடி நடிகை கனிகா பாடுகிறார். அதற்கு, அந்த சீரியலில் சக்தி கேரக்டரில் ஹீரோவாக நடித்திருக்கும் சபரி பிரசாந்த், கையில் உள்ள டப்பாவில் தாளம் தட்டுகிறார்.

‘தேன்மொழி, கனிமொழி, வாடிப்போச்சே என் கிளி’ என்ற பாடலை கனிகா பாட, ஆண்குரலில் அந்த பாடலை, சபரி பிரசாந்த், அவருடன் சேர்ந்து பாடுகிறார். சற்று வெட்கப்பட்டபடி கனிகா பாடினாலும் பாடலை மிக இனிமையாக அவர் பாடுகிறார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிப்பது மட்டுமல்ல, கனிகா நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாடுங்கள் என, பலரும் கமெண்டில் கனிகாவை உசுப்பேற்றி வருகின்றனர்.