விஜய்யை ஓவர் டேக் பண்ணிட்டார் சிவகார்த்திகேயன் – திருப்பாச்சி பட நடிகர் பேச்சு..!

நடிகர் விஜய் கடந்த 1990களில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். துவக்கத்தில் மற்ற அறிமுக நடிகர்களில் ஒருவராக அவரது சில படங்கள் இருந்தன. இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளம் மட்டுமே அவருக்கு இருந்தது. மற்றபடி அவரது படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை.

அதற்கு பிறகு எஸ்ஏ சந்திரசேகர் கேட்டுக்கொண்டதால், விஜயகாந்த் தம்பியாக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை பெற்றார் விஜய். இந்த படத்தில் நடிக்க விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்று தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய்.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார். லியோ படம், 550 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜயை முந்தும் அளவுக்கு சம்பவம் ஒன்றை செய்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அதாவது டிவி காம்பியராக இருந்து, தமிழ் சினிமாவுக்குள் வந்து குறுகிய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக முன்னேறியவர் சிவகார்த்திகேயன். இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில், ராணுவ கதை ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ரூ. 50 கோடிக்கு வாங்கியுள்ளது.

இது விஜய் நடித்த படங்களையே முந்தியதாக கூறப்படுகிறது. அதே போல், பொங்கல் ரிலீஸ் அயலான் படத்துக்கான தியேட்டர் பிஸினஸ் 40 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி விஜய் படங்களையே ஓவர்டேக் செய்து வருவது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே தேமுதிக நிர்வாகிகளில் ஒருவரும், நடிகருமான மீசை ராஜேந்திரன், கேப்டன் இருந்த போது உடல் நலம் குறித்து விசாரிக்க நேரில் வராமல் இறுதி அஞ்சலி செலுத்த மட்டும் விஜய் இப்போது வந்து இருக்கிறார் என்று பிரேமலதாவிடம் சொல்ல, அவரை பிரமேலதா கண்டித்திருக்கிறார் என்ற தகவலும் இப்போது வைரலாகி வருகிறது.

   

--Advertisement--