செல்வராகவன் மீண்டும் கூப்பிட்டால் என் முடிவு இது தான்.. சோனியா அகர்வால் அதிர வைக்கும் பதில்..!

செல்வராகவன் மீண்டும் கூப்பிட்டால் என் முடிவு இது தான்.. சோனியா அகர்வால் அதிர வைக்கும் பதில்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் சோனியா அகர்வால்.

சோனியா அகர்வால்

செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நல்ல திறமையான நடிகையாக அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக இந்த படத்தில் திவ்யா கேரக்டரில் சோனியா அகர்வால் அசத்தினார்.

அடுத்து, 7 ஜி ரெயின்போ காலனி படத்தில், ரவிகிருஷ்ணா ஜோடியாக நடித்த சோனியா அகர்வால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து கோவில், மதுர, ஒரு கல்லூரியின் கதை, ஒருநாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை, ஒரு நடிகையின் வாக்குமூலம், பாலக்காட்டு மாதவன் என பல படங்களில் சோனியா அகர்வால் நடித்தார்.

ஒருகட்டத்தில் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில், 2010ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.

விவாகரத்துக்கு பிறகு, மீண்டும் நடிப்புத்துறையில் ஆர்வம் காட்டத் துவங்கிய நிலையில் மீண்டும் பட வாய்ப்புகளை பெற்றார்.

இப்போது வெப் சீரிஸ்களிலும் சோனியா அகர்வால் நடித்து வருகிறார்.

நடிப்பு என் தொழில்

பல ஆண்டுகளுக்கு முன் செல்வராகவன் இயக்கத்தில் கொக்கி குமார் கேரக்டரில் தனுஷ் நடித்த படம் புதுப்பேட்டை. இந்த படம் ரிலீசான போது நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் தனுஷ்க்கு ஜோடியாக சோனியா அகர்வால், சினேகா இருவருமே நடித்திருந்தனர்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பேட்டை 2 படத்தை இயக்க, செல்வராகவன் ஆரம்ப கட்ட பணிகளை துவங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய சோனியா அகர்வால், கண்டிப்பா புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க கூப்பிட்டா நடிப்பேன். நடிப்பு என்னோட தொழில்.

ஒண்ணும் பிரச்னை இல்லே…

செல்வா கூட சேர்ந்து ஒர்க் பண்றதுல எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லே. ஆனா இதுவரைக்கும் புதுப்பேட்டை 2 படத்துல நடிக்க எனக்கு எதுவும் அழைப்பு வரலே.

யார் யார் இதுல நடிக்க போறாங்கன்னும் எனக்கு தெரியாது, என்று சோனியா அகர்வால் வெளிப்படையாக கூறியுள்ளார்.

செல்வராகவன் மீண்டும் கூப்பிட்டால் நடிப்பேன். நடிப்பு தான் என் தொழில் என சோனியா அகர்வால் அதிர வைக்கும் ஒரு பதிலை தந்து அசத்தியிருக்கிறார்.

---- Advertisement ----

Check Also

கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசே இல்ல.. செல்வராகவன் குறித்து முன்னணி நடிகர் பேச்சு..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் செல்வராகவன். இவர் இயக்கியது ஒரு சில திரைப்படங்கள் என்றாலும் கூட அது …