Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

குளிக்கும் போது அந்த தப்பை பண்ண மாட்டேன்..! – ரகசியம் உடைத்த சீரியல் நடிகை ஸ்ரித்திகா..!

மெட்டிஒலி சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரித்திகா ( Srithika ) பிரபல சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் நாதஸ்வரம் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

Srithika

Srithika

 சில திரைப்படங்களில் கூட ரசிகர்கள் மத்தியில் சீரியல் நடிகையாகவே அறியப்படுகிறார் நடிகை ஸ்ரித்திகா. நாதஸ்வரம் சீரியல் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

சீரியல் ஹீரோயினாக..

இந்த சீரியலுக்கு பிறகு மாமியார் தேவை, உறவுகள், சங்கமம் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை ஸ்ரித்திகா. தற்பொழுது பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் இவர் தொகுப்பாளினியாகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய காதலன் சநீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தங்களுடைய காதல் அனுபவங்கள் பலவற்றை நேர்காணல் ஒன்றில் பதிவு செய்து தன்னுடைய முகத்தில் புன்னகையை ததும்ப விட்டிருந்தார்.

Srithika

Srithika

இவருடைய கணவர் சநீஸ் வேறு யாரும் அல்ல நடிகை ஸ்ரித்திகாவின் அக்கா கணவருடைய நண்பர்தான். எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருவரையும் பேசி பழக்க சொன்னார்கள்.

இரண்டாவது நாளே உணர்வு..

அவருடன் பேச ஆரம்பித்த இரண்டாவது நாளே எனக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது. நீங்கள் நினைப்பது போல ரொமான்ஸ் போன்ற உணர்வு எல்லாம் கிடையாது. நான் எப்பொழுதும் வீட்டில் இருக்கவே விரும்புவேன். நண்பர்களுடன் அதிகம் வெளியே செல்ல மாட்டேன். பார்ட்டி போன்ற விஷயங்களில் எனக்கு ஆர்வம் கிடையாது.

Srithika

Srithika

அதேபோல அவரும் இருந்ததால் எங்கள் இருவருக்கும் பிடித்துப் போனது. திருமணம் செய்து கொண்டோம் என பதிவு செய்திருந்தார்.

குளிக்கும் போது அந்த தப்பை பண்ண மாட்டேன்..

தொடர்ந்து தன்னுடைய அழகின் ரகசியம் குறித்து பேசிய இவர் தான் குளிக்கும் பொழுது அந்த தப்பை செய்ய மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதாவது வேதிப்பொருட்களால் ஆன சோப்புகள் மற்றும் சோப் லிக்விட்களை பயன்படுத்துவது கிடையாது என பதிவு செய்திருக்கிறார். அதற்கு மாறாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பாதாம், பச்சை பயிறு, கடலை ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட மாவில் தான் குளிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Srithika

Srithika

மேக்கப் கூட படப்பிடிப்புக்காக மட்டுமே போட்டுக் கொள்வேன். சாதாரண நேரங்களில் மேக்கப் போடாமல் தான் இருப்பேன். மட்டுமில்லாமல் போட்ட மேக்கப்பை கலைப்பதற்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவேன் என்றும் மேக்கப் ரிமூவர் எனது சொல்லப்படக்கூடிய வேதியல் திரவங்களை பயன்படுத்துவது கிடையாது எனவும் பதிவு செய்திருக்கிறார் ஸ்ரித்திகா.

Continue Reading

Top 5 Posts Today

To Top