விவேக் மரணத்தை விட கொடுமையான சுருளி ராஜன் மரணம்..இளநீர் வடிவில் வந்த இறுதி நாள்..!

விவேக் மரணத்தை விட கொடுமையான சுருளி ராஜன் மரணம்..இளநீர் வடிவில் வந்த இறுதி நாள்..!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகர் ஆன சுருளி ராஜன் 1959ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் ஆசையால் சென்னைக்கு வந்தார்.

அதன் பிறகு கலைஞரின் “காகித பூ” என்ற நாடகத்தில் முதன் முதலில் தேர்தல் நிதிக்காக நடித்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்பட கழகத்தால் எடுக்கப்பட்ட,

விவேக் மரணத்தை விட கொடுமையான சுருளி ராஜன் மரணம்..இளநீர் வடிவில் வந்த இறுதி நாள்..!

“இரவும் பகலும்” என்ற திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து 70களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு “ஆதிபராசக்தி” திரைப்படம்,

மிகப்பெரிய அளவில் புகழும் பெயரையும் கொடுத்தது. தொடர்ந்து 70முதல் 80களில் பிரபலமான நடிகராக அந்த காலகட்ட சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தார் சுருளி ராஜன்.

காமெடி நடிகர் சுருளி ராஜன்:

எம் ஜி ஆர் உடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் சுருளிராஜன் எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் நான் ஆணையிட்டால் பாடலில் எம் ஜி ஆர் உடன் இணைந்து நடித்து பெரும் புகழ் பெற்றார்.

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் என அன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஹீரோக்களுடன் நடித்து பெரும் புகழ்பெற்ற காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் .

சிரிப்பு நடிகர் சுருளிராஜன் புகழும் உச்சத்தில் தமிழ் சினிமாவில் இருந்து கொண்டிருந்தபோதே 1980 ஆம் ஆண்டு 42 வயதில் மரணம் அலாதி மரணம் அடைந்தார்.

அவரது மரணம் ஒட்டுமொத்தத்திலும் தமிழ் சினிமா ரசிகர்களையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காரணம் அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தான் தனது மரணத்தை இளம் வயதிலேயே சந்தித்துக் கொண்டார் என பேசப்பட்டது.

ஆம் அவரது குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் அதற்கு அடிமையாகி விட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடைசியில் மரணித்து போனார்.

போதைக்கு அடிமை:

அவருக்கு சிகிச்சை அளித்து குணமாக எம்ஜிஆர் எவ்வளவோ பண உதவி செய்தும் அவரை குணமடையாமல் மரணித்து போனது கொடுமையான மரணமாக இருந்தது.

ஒரு காலத்தில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்தார் சில படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார்.

விவேக் மரணத்தை விட கொடுமையான சுருளி ராஜன் மரணம்..இளநீர் வடிவில் வந்த இறுதி நாள்..!

சிறிய நடிகர் பெரிய நடிகர் என எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் படங்களில் நடித்து வந்தவர் சுருளிராஜன் இவருடைய கொடூரமான மரணம் குறித்து,

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் அவர் கூறியதாவது,

சுருளிராஜன் மது அருந்தும் பழக்கம் உடையவர் அவரும் வெளிநாட்டு வகை மதுபானங்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியம் சம்பளத்துக்கு பதிலாக வெளிநாட்டு மதுபானங்களை கொடுத்து,

அவருடைய கால் சீட்டைப் பெற்ற இயக்குனர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இப்படி மது அருந்தும் பழக்கம் இருந்தால் நாளடைவில் அவருடைய கல்லீரல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி விட்டது.

இளநீர் வடிவில் வந்த இறுதி நாள்:

அது மட்டுமில்லாமல் சக்கரை நோயினாலும் பாதிக்கப்பட்டு வந்தார். இப்படி இருக்கும் பொழுது அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இளநீரில் ஜின்னை கலந்து குடித்தால்,

உடலுக்கு எந்த தொந்தரவும் செய்யாது என கூறவே அதனை முயற்சித்து இருக்கிறார் இளநீரில் ஜின்னை கலந்து குடித்த போது அவருடைய சர்க்கரை அளவு பயங்கரமாக அதிகமாகி விட்டது.

விவேக் மரணத்தை விட கொடுமையான சுருளி ராஜன் மரணம்..இளநீர் வடிவில் வந்த இறுதி நாள்..!

அவருடைய கல்லீரலும் மோசமான நிலைமையை அடைந்து விட்டது. மருத்துவமனையில் அனுமதிக்க மதிக்கப்பட்டார்.

சில நாட்கள் சிகிச்சை நடந்தது சுருளிராஜனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வெளிநாட்டில் இருந்த மருந்தை விமான மூலமாக இங்கு கொண்டுவர துரித நடவடிக்கை எடுத்தவர்,

அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் அந்த அளவுக்கு முயற்சி எடுத்தும் சுருளிராஜனை காப்பாற்ற முடியவில்லை.

ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என பதிவு செய்திருக்கிறார் ரங்கநாதன்.