Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கோடை வந்தாச்சு செல்லப்பிராணிகளை பராமரிக்க..!” – எந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

பொதுவாகவே இன்று இருக்கக்கூடிய வீடுகளில் அவர்கள் செல்லப்பிராணியாக நாய் மற்றும் பூனை போன்ற பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். குடும்ப உறுப்பினர்களைப் போலவே அந்த பிராணிகளும் அவர்களோடு ஒன்றாக இணைந்து அந்த வீட்டில் வளர்கிறது.

அந்த வகையில் கோடை காலம் தற்போது ஆரம்பித்து விட்டதால் உங்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனையை நீங்கள் எப்படி பேண வேண்டும் என்பதைப் பற்றியும் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் எந்த கட்டுரையில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 உங்கள் செல்ல பிராணிகளை பராமரிக்க கூடிய டிப்ஸ்

👍உங்கள் வீட்டு செல்லப் பிராணிகளை நீங்கள் வெயில் காலத்தில் குளிக்க வைக்க நல்ல சோப்பை வாங்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் அதற்கு என்று தனி மேட் மற்றும் துண்டு  போன்றவற்றை  பயன்படுத்துவது மிகவும் நல்லது.

👍மேலும்  நீங்கள் செல்லப் பிராணிகளுக்காக பயன்படுத்தும் மேட் மற்றும் துண்டை பேக்கிங் சோடா கொண்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கழுவ வேண்டும். அப்படி கழுவுவதன் மூலம் அதிலிருந்து ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.

 👍 உங்கள் வீட்டு செல்ல நாய்கள் மற்றும் பூனைகள் வீட்டில் இருக்கும் பொம்மைகளை கடித்து விளையாடும் போது பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளதால் நீங்கள் அதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் .குறிப்பாக அந்த பொருட்களை நீங்கள் வெந்நீரில் ஷாம்பு போட்டு கழுவி கழுவி அதனை வெயிலில் உலர்த்த வேண்டும்.

--Advertisement--

👍அந்த நாய்கள் வீட்டில் எந்த பகுதியில் மலம் மற்றும் மூத்திரம் செல்கிறதோ அந்த இடத்தை உடனடியாக சுத்தம் செய்து வெள்ளை வினிகரை கொண்டு சுத்தம் செய்து விடுவது கூடுதல் நலன் தரும்.

👍 நாய்களின் உரோமங்கள் கூடுதலாக சம்மர் காலங்களில் உதிரும். எனவே அதை தடுக்க லிண்ட் ரோலர் பயன்படுத்தி தேவையற்ற ரோமங்களை நீங்களே நீக்கி விடுங்கள். இப்படி நீங்கள் செய்வதின் மூலம் வீட்டில் எந்த பகுதிகளிலும் நாயின் ரோமம் விழாமல் சுத்தமாக இருக்கும்.

குறிப்புகளை நீங்கள் பாலோ செய்வதின் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல நாய்களுக்கு கோடையில் ஏற்படும் பிரச்சனைகள் இருந்து விடுதலை கிடைப்பதோடு உங்களோடு இணைந்து அதுவும் கோடையை படுஜோராக என்ஜாய் செய்யும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top