Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

” மாடிப்படிக்கு கீழே இதெல்லாம் இருந்தா No முன்னேற்றம்..!” – உடனே மாத்திருங்க..!!

வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டப்பட்டிருந்தாலும் சில பொருட்களை சில இடங்களில் வைக்கும் போது ஏற்படக்கூடிய தவறினால் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த வரிசையில் உங்கள் வீட்டில் மாடிப்படி இருக்கிறதா?  அப்படி இருந்தால் அந்த மாடிப்படிக்கு இந்த பொருட்களை வைத்திருந்தால் கட்டாயமாக உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமே ஏற்படாது.

 வாஸ்துபடி இந்த பொருட்களை நீங்கள் மாடி படிக்கு கீழே சேமித்து வைப்பது கெட்டதாக இருப்பதோடு உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாகவும் இடையூறாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே மாடிப்படிக்கு கீழ் எதை வைக்க கூடாது என்பதை பற்றி இப்போது எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மாடிப்படிக்கு வைக்க கூடாத பொருட்கள்

மாடிப்படிக்கு கீழ் இருக்கும் பகுதி பாதுகாப்பான பகுதியாகவும் மற்றவர்கள் யாரும் பார்க்காத பகுதியாகவும் இருப்பதால் நிறைய பேர் அந்தப் பகுதியில் லாக்கர் மற்றும் பண பெட்டிகளை வைக்க நினைக்கிறார்கள். ஆனால் இந்த லாக்கர் மற்றும் பணப்பெட்டிகள் லஷ்மி தேவி வசிக்கும் பகுதியாக இருப்பதால் அதை அந்த இடத்தில் வைப்பது லக்ஷ்மி தேவியை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

 எனவே நீங்கள் லாக்கர் மற்றும் பணத்தை வைக்கக்கூடிய பெட்டியில் அந்த பகுதியில் வைத்தால் கட்டாயம் லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவதோடு பணப்புழக்கமும் குறைந்து பண வரவும் தடைபடும்.

--Advertisement--

 மேலும் மாடிப்படியின் அடிப்பகுதியில் இடம் இல்லாதவர்கள் குளியல் அரையை அல்லது கழிப்பறையை கட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அது வாஸ்துபடி மிகப்பெரிய தவறு. எனினும் நீங்கள் அப்படி அந்த இடத்தில் குளியலறை அல்லது கழிவு அறையை கட்டி இருந்தால் அங்குள்ள குழாய்களில் நீர் கசிவு இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் அப்படி நீர் கசிவு ஏற்பட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படுவதோடு தீராத பல கஷ்டமும் ஏற்படும்.

உங்கள் வீட்டில் குப்பை தொட்டிகளை  மாடிப்படிக்கு கீழ் வைக்க கூடாது. அப்படி வைப்பதின் மூலம் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதனால் பிரச்சனைகள் ஏற்படுவதோடு உங்கள் முன்னேற்றமும் தடைப்படும்.

 இது மட்டுமல்ல  மாடி படியில் அடிப்பகுதி காலியாக இருக்கிறதே என்று உங்கள் காலணிகளை அங்கு வைப்பதன் மூலம் எதிர்மறையாற்றல் உங்கள் வீட்டில் அதிகரித்து பல பிரச்சனைகளை உருவாக்கும். எனவே எனவே காலணிகளை உங்கள் வீட்டு மாடி படியில் வைக்காதீர்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top