“அட ஆண்டவா தர்பூசணிய பயன்படுத்தினால் முகப்பரு வராதா..!” – ஆச்சரியமா இருக்க..!

இன்று இருக்கும் இளம் பெண்களுக்கு மன அழுத்தம் மட்டுமல்லாமல் சரியான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாததாலும், ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக முகப்பரு வருவதும், போவதும் இயல்பாகி விட்டது.

இன்னும் இந்த முகப்பருவை தடுக்க பல வகைகளில் அவர்கள் முயற்சி செய்வதோடு மட்டுமல்லாமல், அழகு நிலையங்களுக்கு சென்று பணங்களை கொட்டிக் கொடுத்து வருகிறார்கள்.

watermelon face mask

எனினும் இதற்கான ரிசல்ட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த நிலையை தகர்த்தெறிந்து இயற்கையான முறையில் உங்கள் முகப்பருக்களை தடுக்க நீங்கள் தர்பூசணி பழத்தை பயன்படுத்தினால் போதும். உங்கள் முகத்தில் இருந்த பருக்கள் எங்கே என்று கேட்கத் தோன்றும் விதத்தில் உங்கள் முகம் பளபளப்பாக முகப்பரு இல்லாமல் மாறிவிடும்.

அதற்கு நீங்கள்  கோடையில் தர்பூசணி பழத்தை அப்படியே வெட்டி சாப்பிடலாம் அல்லது இந்த பழத்தை நீங்கள் உங்கள் முகத்திற்கு பேஸ் மாஸ்காக பயன்படுத்துவதின் மூலம் முகப்பருவை எதிர்த்து வராமல் தடை செய்து விடலாம்.

இதில் அதிக அளவு இருக்கக்கூடிய மல்டி விட்டமின்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின் சி, போன்றவை ஃப்ரீரேடிகளை எதிர்த்து சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவி செய்கிறது.

--Advertisement--

watermelon face mask

மேலும் இதில் இருக்கும் கொலாஜன் சருமத்தை பாதுகாப்பதோடு தோலுக்குத் தேவையான நெகிழ்ச்சி தன்மையைக் கொடுத்து சரும சுருக்கங்களை தடுக்கிறது.மேலும் வைட்டமின் பி5, வைட்டமின் ஏ, பொட்டாசியம், தாமிரம் அதிக அளவு இருப்பதால் உங்கள் சருமம் மினு மினுப்பாக மாறுகிறது.

தர்பூசணியில் இருக்கும் மெக்னீசியமானது உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதால், முகப்பரு வருவது நின்று விடுகிறது. அது மட்டுமல்லாமல் இதில் இருக்கும் மாலிக் அமிலம் இறந்த செல்களை அகற்ற அபாரமாக உதவி செய்கிறது.

watermelon face mask

எனவே தர்பூசணி பழச்சாறை எடுத்து உங்கள் முகத்தில் பத்து முதல் 15 நிமிடங்கள் தடவி விட்டு பிறகு இதை குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம் உங்கள் முகப்பரு எளிதில் குறையும்.

மேலும் இந்த சாறோடு நீங்கள் தக்காளி அல்லது மஞ்சள் தூள் போன்றவற்றை கலந்து போடலாம். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை மாதம் நான்கு முறை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.