Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஆவி பிடித்தால் முக அழகு ஜொலிக்குமா? – ஆத்தி எத்தனை நாள் தெரியாம போச்சே..!!

 நீங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உங்களை இளமையாக வைத்துக் கொள்வதோடு  பணம் செலவு அதிகம் செய்யாமல் உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் பியூட்டி பார்லர் வரை செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

 எனவே உங்கள் சரும அழகை மேம்படுத்த உங்கள் வீட்டில் இருக்கும் பொருளைக் கொண்டே நீங்கள் ஆவி பிடித்தால் கட்டாயம் உங்கள் முக அழகு ஜொலி ஜொலிக்கும்.

அந்த வகையில் உங்கள் சரும அழகை மேன்படுத்துவதில் ஆவி பிடித்தல் எந்த அளவு வேலை செய்கிறது. அதன் பயன்கள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

 ஆவி பிடித்தலின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

👍ஆவி பிடித்தலின் மூலம் சருமங்களில் இருக்கும் துளைகளில் இருக்கக்கூடிய அழுக்குகள், எண்ணெய் பிசுகள் வெளியேறும். இதன் மூலம் முகம் பளபளப்பாகவும் பொலிவுடன் மாறும்.

👍இந்த மாதிரி ஆவி பிடிப்பதை முக நீராவி என்று அழைப்பார்கள். செலவே இல்லாத இந்த அழகு பராமரிப்பில் நீங்கள் இதுபோல செய்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும்.

--Advertisement--

 👍சூடான நீரில் இருந்து வெளியாகும் ஆவியானது முகத்தில் படும்போது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து சருமத்தை பாதுகாக்க உதவி செய்கிறது. நீராவி பிடிப்பதன் மூலம் தலையில் நீர் கோர்த்திருத்தல், தலைபாரம் போன்றவற்றுக்கு நிவாரணம் தருகிறது.

👍 நீராவி பிடித்தல் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் பெண் பிள்ளைகள் மறைகிறது. பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்க நீராவி பிடித்தல் மூலம் நாம் சரி செய்ய முடியும்.

 👍முகத்தில் இயற்கையாக சுரக்கக்கூடிய எண்ணெய் பசையை சரியான விகிதத்தில் சுரக்க வைக்க இந்த நீராவி பிடித்தல் உதவி செய்கிறது.எனவே மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை பிடித்தல் மிகவும் நல்லது.

 👍நீராவி பிடித்தல் மூலம் ஆரோக்கியமான ரத்த சுழற்சி ஏற்படு.ம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது முகப்பொலிவாகும். முகத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவி செய்கிறது.

 👍மேலும் இறந்த செல்களை கெட்ட பாக்டீரியாக்களை இது வெளியேற்றுவதற்கு உறுதுணை செய்கிறது. முகத் துளைகளை இது திறந்து விடுவதின் மூலம் முகப்பரு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

👍உங்கள் உடலுக்கும் முகத்திற்கும் மனதிக்கும் மிக நல்ல முறையில் ஒரு புத்துணர்வை தருவதால் நீங்கள் ரிலாக்ஸாக உணர்வீர்கள். உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருந்தால் அதை சரி செய்வதோடு சருமங்கள் வயதாவதை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த ஆவி பிடித்தலுக்கு உள்ளது.

Continue Reading
 

More in

Trending Now

To Top