Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

” திருநீறு எப்படி தரிக்க வேண்டும்..!” – ஒரு ஆன்மீக அலசல்..!

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பிழைகளை நீக்கும்படி ஆண்டவனிடம் வேண்டி அவர்கள் அளிக்கின்ற நீறை நம் நெற்றியில் பூசுகிறோம். அதனையே திருநீறு என்று மிக அருமையான தமிழ் சொல் கொண்டு அழைக்கிறோம்.

 இதனைத் தான் நீறில்லா நெற்றி பாழ்  என்று திருமூலர் கூறியிருக்கிறார். இந்த  திருநீற்றை நீங்கள் உங்கள் நெற்றியில் பூசிக்கொண்டு கோயிலுக்குச் செல்லும் போது அது அங்கு இருக்கக்கூடிய நேர்மறையான ஆற்றல்களை அனைத்தும் கவர்ந்து ஈர்த்து உங்கள் உடலுக்கு புத்துணர்வை அளிக்கிறது.

எனவே திருநீற்றை நீங்கள் உங்கள் முகம் மற்றும் நெற்றியில் பூசிக் கொள்வது மிகவும் நல்லது. அப்படிப்பட்ட திருநீற்றை எப்படி அணிய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

திருநீற்றை தரிக்க கூடிய முறை

👌 நீங்கள் திருநீற்றை பூசும்போது வடக்கு அல்லது கிழக்குப் பக்கமாக நின்று கொண்டு பஞ்சாட்சர மந்திரமான ஓம் நமசிவாய என உச்சரித்து தரிக்க வேண்டும்.

👌 உங்கள் கட்டை விரலால் திருநீற்றை எடுத்து அணிந்தால் உங்களுக்கு நோயை ஏற்படுத்தும். அது போல ஆள்காட்டி விரலால் மட்டுமே திருநீற்றை எடுத்து அணிவது  உங்கள் இல்லத்தில் பொருட்களை நாசமாக்கும். மேலும் நடு விரலால் திருநீற்றை தொட்டால் உங்களுக்கு நிம்மதி இல்லாமல் போகும்.

--Advertisement--

👌 எனவே மோதிர விரலால் நீங்கள் திருநீற்றை எடுத்து அணிவதின் மூலம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். மேலும் சுண்டு விரலால் நீங்கள் திருநீற்றை அணிந்தால் கிரக தோஷம் ஏற்படும்.

👌 எங்க கடவுளுக்கு உரிய திருநீற்றை அணிவதற்கு எந்தக் காலமும் தடை இல்லை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அதை அறிந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் மோதிர விரலையும்  கட்டை விரலையும் சேர்த்து விபூதியை எடுத்து வைக்கும் போது  உலகமே உங்கள் வசம் வந்து சேரும் என சாஸ்திரங்கள் கூறுகிறது.

எனவே ஆன்மீக ரீதியாகவும் மருத்துவர் ரீதியாகவும் எண்ணற்ற பயன்களை கொடுக்கக்கூடிய இந்த திருமுறை நீங்கள் அனுதினமும் வைத்து வருவதால் உங்கள் ஆற்றல் மிகவும் அறிவு வளரும். ஆரோக்கியமான வாழ்வை நீங்கள் வாழ முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top