Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம்- போலீசில் புகார்

கௌரவ டாக்டர் பட்டம்  பலருக்காக பணம் கொடுத்து வாங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல காலமாக நிலவி வரும் நிலையில் அதை நிறுவும் விதமாக தற்போது ஒரு நிகழ்வு நடந்தது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை வாடகைக்கு எடுக்க ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் தாங்கள் அவார்ட் ஃபங்ஷன் ஒன்றை நடத்தப் போவது உள்ளதாக ஒரு ஆர்கனைசேஷன்  தெரிவித்திருந்திருக்கிறது. அதை ஒப்புக்கொண்டு பல்கலைக்கழகம்  அவர்களுக்கு தேதி ஒதுக்கி கொடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் அந்த அமைப்பு அவார்ட் பங்ஷனை நடத்தாமல் போலியாக அண்ணாமலை பல்கலைக்கழக கௌரவ டாக்டர் பட்டம் என்ற போலியான பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ளது தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அந்த பட்டமளிப்பு விழாவில் தமிழகத்தின் முன்னணி நகைச்சுவையாளரான நடிகர் வடிவேலுவுக்கும்,  இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கும் போலியான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளான பின்பு  தற்போது அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு உங்களை நடத்தியுள்ளார்.

--Advertisement--

அதில் அவர் குறிப்பிட்டதாவது அந்த அமைப்பு தங்களிடம் அவார்ட் பங்க் நடத்தப் போவதாக மட்டுமே தெரிவித்து போலியான டாக்டர் பட்டம் வழங்கியது எங்களுக்கு தற்போது வெளியே வந்த வகையில் நாங்கள் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளோம்  என கூறினார்.

மேலும் அவர் அண்ணாமலை பல்கலைக்கழகம் புனிதமான இடம் வரலாற்று சிறப்புமிக்க இடம் இந்த இடத்தில் இது போன்ற தவறான செயல்கள் நடைபெற்றதற்கு வருந்துகிறோம் என துணைவேந்தர் வேல்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு அவர்களுக்கு போலியான டாக்டர் பட்டம் வழங்க பெற்றது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது மேலும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இதுபோல சுவாரசியமான செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில்  தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top