ஹிப் ஹாப் ஆதி இரண்டு வேடங்களில் நடித்திருக்க கூடிய திரைப்படம் வீரன். இந்த திரைப்படம் நேற்று இரண்டு ஜூன் 2023 அன்று வெளியாகி இருக்கிறது. இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.
பொதுவாக சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட படங்கள் என்றாலே அது ஹாலிவுட் மட்டும் தான் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தமிழில் இது போன்ற திரைப்படங்கள் வெளியாவது குறைவு. அரிது.
இந்த நிலையில் சூப்பர் ஹீரோ கான்செப்டில் வெளியாகியிருக்கிறது இந்த வீரன் திரைப்படம். திரைப்படம் டிசி, மார்வெல் வரிசையில் மின்னல் சக்தி கொண்டிருக்கும் ஹீரோ ஒருவரின் கதை தான் இது.
பொதுவாக சூப்பர் ஹீரோ கான்செப்ட் என்றாலே அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து விடும். ஆனால், திரைக்கதை, படத்தின் மேக்கிங் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தான் வெற்றி தோல்வி அமையும்.
அந்த வகையில் வீரன் திரைப்படம் எப்படி இருக்கிறது. என்பதை பார்ப்போம். இந்த திரைப்படம் அறிவிப்பு வெளியான பொழுது ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு கிடைத்தது.
அதே போல ஏற்கனவே மரகத நாணயம் என்ற ஒரு பேண்டஸி திரில்லர் கதையை இயக்கியிருந்த இயக்குனரான ஏ ஆர் கே சரவணன் இந்த கதையை இயக்குகிறார் என்பதும் ரசிகர்கள் மகிழ்ச்சியானார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு படக்குழு பூர்த்தி செய்து இருக்கிறதா..? என்பதை பார்க்கலாம்.
“வீரன்” திரைப்படத்தின் கதை
வீரனூர் என்ற பகுதியில் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் குமரன். தன்னுடைய சிறு வயதிலேயே மின்னலால் தாக்கப்பட்டு சுயநினைவை இழந்து விடுகிறார். இதனை தொடர்ந்து அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் குமரனுக்கு எப்போது வேண்டுமானாலும் சுயநினைவு வரலாம். அவர் உயிருடன் தான் இருக்கிறார் என கூறுகிறார் மருத்துவர்.
இதனால், தன்னுடைய தம்பியான குமரனை வீரனூரில் இருந்து சிங்கப்பூருக்கு அழைத்து சென்று விடுகிறார் குமரனின் அக்கா. சிங்கப்பூருக்கு சென்ற பிறகு சில நாட்களில் கதாநாயகன் குமரனுக்கு நினைவு திரும்புகிறது.
நாட்கள் செல்ல செல்லத்தான் தனக்குள் ஒரு அபரிமிதமான சக்தி இருப்பதை உணருகிறார். அது மட்டுமில்லாமல் தன்னால் இன்னொருவரின் மூளையை கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு ரகசியத்தையும் தெரிந்து கொள்கிறார்.
சிங்கப்பூரிலேயே 14 ஆண்டுகள் வாழும் இவர் அதன் பிறகு மீண்டும் வீரனூருக்கு வருகிறார். சிறுவயது நண்பர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அந்த சமயத்தில் உள்ளே நுழைகிறார் வில்லன் வினய்.
தன்னுடைய 2000 கோடி மதிப்பிலான ஆபத்தான ஒரு திட்டத்தை வீரனூரில் செயல்படுத்த முயற்சி செய்கிறார். இந்த திட்டத்தின் காரணமாக அந்த ஊர் மக்கள் அச்சம் கொள்கிறார்கள். எனவே இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என போராடுகிறார்கள். இந்த விஷயம் ஹீரோ குமரனுக்கும் தெரிய வருகிறது.
அதன்பிறகு, குமரன் என்ன செய்தார். வில்லன் வினய் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றினாரா..? இல்லையா..? என்பது தான் மீதி கதையாக இருக்கிறது.
“வீரன்” படம் எப்படி இருக்கு..?
வழக்கமான கதை என்றாலும் கூட இந்த திரைப்படம் ரசிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஹிப்பாப் ஆதி வீரன் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு நடிகராக நிரூபித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
மட்டுமில்லாமல் சண்டைக் காட்சிகளிலும் அவருடைய தேர்ச்சியை நம்மால் கண் கூட பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார்.
கடந்த சில திரைப்படங்கள் இவருக்கு தோல்வி திரைப்படமாக அமைந்தன. ஆனால், இந்த திரைப்படத்தை அப்படியே கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்க நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி என்று தான் கூற வேண்டும்.
படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தின் கதைக்கு வலு சேர்க்கின்றன. முனிஷ்காந்த், காளி வெங்கட் காம்போவை முண்டாசுப்பட்டி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில், இந்த திரைப்படத்திலும் முனீஸ்காந்த்-காளி வெங்கட் காம்போ சிரிப்பாலையில் ஆழ்த்துகிறது.
“வீரன்” வொர்த்தா..? இல்லையா..?
வில்லனாக வரும் வினை சில காட்சிகளில் மட்டும்தான் தோன்றுகிறார் என்றாலும் கூட வில்லனுக்கு பெரிய ஸ்கோப் இருப்பதாக இல்லை. இது ஒரு ஏமாற்றம். ஆனால் இரண்டாவது வில்லனாக தோன்றும் பத்ரி ரசிகர்களை மிரட்டுகிறார்.
மட்டுமில்லாமல் நடிகர்கள் செல்லா, போஸ் வெங்கட், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் தங்களுடை நடிப்பு அனுபவத்தை திரையில் காட்டியிருக்கின்றனர். மேலும், படத்தில் நம்பிக்கை மூடநம்பிக்கை இரண்டுக்கும் உண்டான வித்தியாசம் என்ன என்பதை தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இது ஒரு அருமையான ஒரு விஷயம்.
அருமையான இயக்கம் திரைக்கதை படத்தின் மேக்கிங் அனைத்தும் ரசிகர்களை கவுரும் விதமாகவே அமைந்திருக்கின்றது. ஆடை வடிவமைப்புக்கு நிறைய மெனக்கெட்டு இருக்கிறார்கள் என்பதை படத்தை பார்க்கும் போது நமக்கு தெரிகிறது.
கேமராமேன் தீபக் டி மேனனின் ஒளிப்பதிவு மிரட்டலாக இருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகளை தத்ரூபமாக படம் எடுத்திருக்கிறார். பாடல்கள் என்னவோ மனதில் நிற்கவில்லை.
பொதுவாக ஒரு படம் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்றால் அந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை மிரட்டுமாக அச்சுறுத்தும் விதமாகவும் பயமுறுத்தும் விதமாகவும் அமைக்கப்பட வேண்டும்.
ரசிகர்களுக்கு அந்த வில்லன் மீது கோபம் கொப்பளித்துக் கொண்டு வர வேண்டும். அந்த அளவுக்கு வடிவமைக்கப்படும் அனைத்து படங்களும் வெற்றி படங்களாக இருக்கின்றன.
அந்த ஒரு குறையை இந்த திரைப்படத்தில் இருக்கிறது. ஹீரோவை போலவே வில்லனுக்கும் நிறைய வில்லத்தனமான காட்சிகளை சேர்த்து இருக்கலாமே.. என்ற எண்ணம் தோன்றுகிறது.
மற்றபடி இந்த திரைப்படம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க ஏதுவான ஒரு திரைப்படம் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க கூடிய வகையில் அருமையான திரை கதையுடன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது வீரன் என்று கூறலாம்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.