கல்யாணம் என்பது இது தான்.. வித்யா பாலன் சர்ச்சை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் பாரம்பரியத்தில், கலாசாரத்தில் திருமணம் என்பது இன்னும் வாழ்க்கையில் ஒரு புனிதமான விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில், தமிழக மக்கள் மத்தியில் திருமணம் என்பது இன்னும் அதற்குண்டான கௌரவத்தை இழந்து விடவில்லை.

ஒரு சிலர் அந்த திருமணத்தை பெரிய பொருட்டாக மதிக்காத போதும், இன்னும் பெரும்பாலான மக்கள் மத்தியில் திருமணம் குறித்து முக்கியத்துவமும், பெருமையும் வாய்ந்தது என்பதும், மரியாதையும் கலாச்சார பண்பாடும் அதில் நிறைந்திருக்கவே செய்கிறது.

ஆனால், சில நடிகைகள் கூறுகின்ற கருத்துகளை பார்க்கும்போது திருமணம் என்பதை, ஏதோ வேடிக்கை நிறைந்த ஒரு ஜாலியான விஷயம் போல்தான் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

திருமணம் என்பது…

திருமணம் என்பது மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, பிள்ளைகளின் எதிர்காலம் என எவ்வளவோ விஷயங்களை, வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது.

ஒரு திருமணம் வாயிலாக, எத்தனையோ புதிய உறவுகளை அதில் நாம் பெறுகிறோம். வாழ்க்கையில் பல உன்னத உணர்வுகளை அடைகிறோம் என்பதை எல்லாம் சில நடிகைகள் உணர்வதே இல்லை.

--Advertisement--

வித்யாபாலன்

இந்தி சினிமாக்களில், விளம்பரங்களில் அதிகமாக நடித்து வரும் வித்யா பாலன், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். த டர்ட்டி பிச்சர் என்ற சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர்.

இவர் அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களை பேசி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இப்போது திருமணம் குறித்து பேசி தனது கருத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

அறிவு கெட்ட விஷயம்

பிரபல நடிகை வித்யா பாலன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது, திருமணம் என்பது இரண்டு பேர் இணையக்கூடிய ஒரு உறவு அவ்வளவுதான், இதில் இரண்டு குடும்பங்கள் இணைகிறது. அந்த பெண்தான் அந்த ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாங்க வேண்டும் என்று கூறுவதெல்லாம் அறிவு கெட்ட விஷயமாக பார்க்கிறேன்.

அடிமை கிடையாது

இரண்டு பேர் இருக்கிறார்கள், அவர்கள் தங்களுடைய துணைக்காக ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பது என்ற ஒரு உடன்பாட்டுக்கு வருகிறார்கள், அதுதான் திருமணமே தவிர பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்றோ, அல்லது ஆண்கள் பெண்களுக்கு அடிமை என்றோ எந்த ஒரு அர்த்தமும் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் பெண்கள் மீது மிகப்பெரிய பொறுப்புகளை சுமத்தி விடுகிறார்கள் திருமணம் என்ற பெயரில், இந்த நிலை மாற வேண்டும் என பதிவு செய்திருக்கிறார் நடிகை வித்யா பாலன்.

இதனைக் கேட்ட ரசிகர்கள், திருமணம் என்பது நீங்கள் சொல்வது போல இரண்டு பேருக்குள் நடக்கும் ஒப்பந்தம்தான்.

ஆனால் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய உறவுமுறை மற்றும் உறவினர்கள் ஆகியோர் அந்த இருவருக்கும் ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடிவந்து என்ன பிரச்சனை, ஏது பிரச்சனை என்று கேட்பார்கள்.

அனுபவங்களை…

அவர்களுக்கு தகுந்த மரியாதையும் அவர்களுக்கு தகுந்த இடத்தையும் அந்த திருமணம் செய்து கொள்ளும் இருவரும் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் பொழுது அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஏனென்றால் உறவினர்கள் என்பவர்கள், பல்வேறு அனுபவங்களை கொண்டவர்கள். அவர்களுடைய அனுபவம் புதிதாக திருமணம் ஆகக்கூடிய நபர்களுக்கு உதவும்.

விபச்சாரத்தை வேண்டுமென்றால்…

எனவே திருமணம் என்பது இரண்டு பேருக்குள் நடக்கக்கூடிய ஒரு சடங்கு என்று பார்த்தால் அது சரியாக இருக்காது. விபச்சாரத்தை வேண்டுமென்றால் இரண்டு பேருக்கும் நடக்கக்கூடிய ஒரு விஷயம் என்று கடந்து விட்டு சென்றுவிடலாம்.

ஆனால், திருமணம் என்பது குடும்பங்கள் இணையக்கூடிய ஒரு விஷயம் எனக் கூறி நடிகை வித்யா பாலன் கூறிய கருத்தை எதிர்த்து, கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ரசிகர்கள் உங்களுடைய கருத்து என்ன என்று கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

கல்யாணம் என்பது இரண்டு பேர் இணையும் உறவுதான் என்று வித்யா பாலன் சர்ச்சை பேச்சுக்கு, ரசிகர்கள் கண்டபடி விளாசி வருகின்றனர்.