“கதை சொல்ல வருபவர்களிடம் இதை செய்ய கூடாது..” நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு விஜய் சேதுபதி கூறிய ரகசியம்..!

டஸ்கி ஸ்கின் அழகியான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்து வரக்கூடிய படங்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் இவருக்கு நடிகர் விஜயா சேதுபதி கூறிய டிப்சினை அட்வைஸாக எடுத்துக்கொண்டு தான் சினிமாவில் அதிக அளவு சாதித்து இருக்கிறார்.

பொதுவாகவே சினிமா திரைப்படங்களை பொருத்த வரை கதை என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கதை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் திரைப்படம் மக்கள் மத்தியில் வெகுவாக பேமஸ் ஆகி நல்ல முறையில் ஓடும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கதை..

திரைபடங்களில் எப்போதுமே நல்ல கதையம்சம் உள்ள கதைகளுக்கு என்று நல்ல வரவேற்பு இருக்கும். அது சிறிய பட்ஜெட் படம் என்றாலும் மக்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடும். அந்த படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. அறிமுக நடிகர்கள் இருந்தால் கூட திரைக்கதை வலுவாக இருக்கும் போது திரைப்படம் வெற்றி அடைவதற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்கும்.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் தேர்ந்தெடுக்கக்கூடிய கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து கொண்டு தனது ஊடகப் பணியை ஆரம்பித்த இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் நீதானா அவன் என்ற படத்தில் 2010 ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த இவருக்கு 2012 ஆம் ஆண்டு அமுதா என்ற கேரக்டரை அட்டகத்தி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளி வந்த வடசென்னை திரைப்படம் இவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் திரை உலகம் முழுவதுமே ஒரு நல்ல பெயரையும், அதிக அளவு நடிக்க கூடிய திரைப்படங்களையும் பெற்று தந்தது.

இவர் அப்பா மட்டுமல்லாமல் இவர் தாத்தா அமர்நாத் ஒரு தெலுங்கு நடிகராக விளங்கி இருக்கிறார்கள். கலை குடும்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவில் தன்னை நிலை நிறுத்த ஆரம்ப காலத்தில் கடுமையான சிக்கல்களை சந்தித்து இருக்கிறார்.

மேலும் இவர் சிவப்பு நிறம் இல்லாமல் இருந்ததால் பல இயக்குனர்கள் நிறத்தைக் காட்டி இவரை வேண்டாம் என்று கூறி இருந்தார்கள். எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர்களுக்கு பதிலடி தரக்கூடிய வகையில் தன்னுடைய அற்புத நடிப்பால் 2014 ஆம் ஆண்டு நடித்த காக்கா முட்டை திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்புக்காக தமிழக அரசு திரைப்பட விருது கிடைத்தது.

கதையை முழுதாக கேட்க வேண்டும்..

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் விஜய சேதுபதியோடு இணைந்து ரம்மி படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சிறந்த நட்பு முறையில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜயசேதுபதி பற்றி பல கிசுகிசுக்கள் எழுந்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

எனினும் அவர்கள் இருவரும் அதை பற்றி கவலைப்படாமல் தீவிரமாக சினிமாவில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விஜயசேதுபதி கொடுத்த டிப்ஸ் மற்றும் அட்வைஸை கேட்டு இன்று வரை திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துக் கொண்டிருப்பதாக சில விஷயங்கள் கசிந்துள்ளது.

அதாவது ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு எந்த கதையாக இருந்தாலும் அந்த கதையை முழுமையாக கேட்க வேண்டும். ஏனென்றால் அந்த கதையில் என்ன இருக்கிறது என்பதை நம்மால் யூகிக்க முடியாது.

எனவே கதையை முழுமையாக கேட்டால் மட்டும் தான் அதன் வலிமை என்ன என்று நமக்கு தெரிய வரும் பின்பு புரியும். இதனை அடுத்து அந்த கதையை தேர்வு செய்வதும் நிராகரிப்பதும் நம்முடைய முடிவு ஆனால் எந்த கதையையும் பாதியில் நிறுத்திவிட்டு எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுவது மிகப்பெரிய தவறு.

ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். நீங்கள் முழுமையாக அந்த கதையைக் கேட்ட பிறகு தான் கதையை தேர்வு செய்யலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுக்க வேண்டும்.

அதே சமயம் உங்களுக்கு ஒரு கதை பிடித்திருந்தால் அதனை தேர்வு செய்யுங்கள். ரசிகர்களுக்கு இது பிடிக்குமா? பிடிக்காதா? என்று யோசிக்காதீர்கள். அதனை ரசிகர்கள் முடிவு செய்து கொள்வார்கள். நாம் அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

எனவே கதை சொல்ல வருபவர்களுக்கு அவருக்கு உண்டான நேரத்தை நாம் ஒதுக்கி கொடுக்க கொடுக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி நடிகர் விஜயசேதுபதி ஆரம்பத்திலேயே தன்னுடைய வெற்றிக்கான ரகசியத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் பகிர்ந்திருக்கிறார்.

இதனை அடுத்து கதை சொல்ல வருபவர்களிடம் இதை செய்யக்கூடாது என்ற விஜய் சேதுபதி கூறிய ரகசியத்தை தற்போது வரை ஐஸ்வர்யா ராஜேஷ் கடைப்பிடிப்பதாக பிரபல நடிகர் மற்றும் திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.