“பத்து ரூபாயில் உங்க வீட்டில் வேக்ஸிங்..!” – நீங்களும் செய்து பாருங்க..!

வேக்ஸிங்: பொதுவாக பெண்கள் அனைவருமே உடலில் இருக்கக் கூடிய தேவையில்லாத முடிகளை எளிதில் நீக்கி விட வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களை நோக்கி ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்து வருகிறார்கள். ஆனால் இனி மேல் அப்படி நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலேயே நீங்கள் இந்த வேக்ஸிங்கை மிகவும் எளிதாக செய்து முடித்து விடலாம்.

waxing in Home

இதற்கு எந்தவித செயற்கை முறையை நாம் பின்பற்றாமல் இயற்கையான பொருட்களை வைத்து வீட்டிலேயே வேக்ஸிங் செய்து அந்த தேவையற்ற முடிகளை அகற்றுவதோடு ரசாயனங்களின் பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் பணத்தையும் மிச்சப் படுத்த முடியும்.

அதற்கு நீங்கள் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களான சர்க்கரை இரண்டு கப், எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன், தண்ணீர் இரண்டு ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன் இவை போதுமானது.

waxing in Home

மேற்கூறிய எந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு குறைந்த தீயில் வைத்து நன்றாக இளக்க வேண்டும்.மேலும் சர்க்கரை உருகி அதன் நிறம் மாறி தேன் போல் மாறும் படி பார்த்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு  கிண்ணத்திற்கு இதை மாற்றிக் கொள்ளவும்.

இதனையடுத்து எங்கெங்கு வேண்டாத முடிகள் உள்ளதோ?  அந்த பகுதிகளில் நீங்கள் சிறிதளவு  டல்கம் பவுடரை நன்கு போட்டு கொள்ளவும். பின்னர் வேக்ஸிங் செய்ய நீங்கள் ஐஸ்கிரீம் ஸ்டிக்கை வைத்து அந்த பசையை அப்படியே எடுத்து தடவ வேண்டும். இப்போது முடி வளர்ச்சி இருக்கும் திசையில் நீங்கள் இந்த வேக்ஸை தேய்த்து அப்படியே சில மணி நேரங்கள் கழித்து எடுத்து விடுங்கள்.

waxing in Home

இப்போது தேவையில்லாத முடிகள் அனைத்தும் இதன் மூலம் நீங்கி இருக்கும். வேக்ஸிங் செய்த பிறகு நீங்கள் அதிக அளவு சூரிய ஒளியில் செல்வதை தவிர்த்து விட்டு மாய்ஸ்சரைசர் கிரீம் ஏதேனும் இருந்தால் அதை அந்தப் பகுதியில் தேய்த்து விடுங்கள்.

மேற்கூறிய வழிகளைப் பயன்படுத்தி நீங்களே எளிய முறையில் தேவையற்ற முடிகளை இதுபோல நீக்கிவிடலாம். இந்த குறிப்பை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள். கட்டாயம் உங்களுக்கு நன்மை கிடைக்கும். அப்படி கிடைத்தால் உங்களுடைய அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.