Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வேண்டுமா..!” – அப்ப இத செய்யுங்க..!

 இன்றைய பரபரப்பான ராக்கெட் யுகத்தில் மனிதர்களுக்கு நிம்மதி இல்லாமல் என்ன செய்வது என்ற மன குழப்பத்தில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அவர்கள் தங்கள் பணி புரியும் பகுதிகளிலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானாலும் தங்களுடைய வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எதார்த்தமான ஒன்றுதான்.

 ஆனாலும் அவர்களின் எண்ணம் நிறைவேறி இருக்கிறதா? என்று கேட்டால் நூற்றில் 80 சதவீதமான பேர்களின் வீடுகளில் அந்த நிம்மதி சந்தோஷம் இன்று இல்லை என்று தான் கூறி வருகிறார்கள்.

இதற்குக் காரணம் என்னவென்று பார்க்கையில் அந்த வீட்டில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல்களை தவற விட்டு அதிகமாக எதிர்மறை ஆற்றல்களை பெற்றிருப்பதால் தான் வீடுகளில் இப்போது சந்தோஷம் நிலவவில்லை என்று கூறலாம்.

 உங்கள் வீடுகளில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

நேர்மறை ஆற்றலை அதிகரிக்க

உங்கள் வீடுகளில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் கச்சடா பொருட்களை வெளியே தூர போடுங்கள்.

--Advertisement--

 அதுமட்டுமல்லாமல் தேவையில்லாத பிளாஸ்டிக் பாத்திரங்கள் தொலைந்து போன பழைய பொருட்கள் போன்றவை அனைத்தும் வீட்டுக்குள் இருக்கும்போது எதிர்மறை ஆற்றல்களை தூண்டிவிடும். எனவே இந்தப் பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள் .

வீடுகளில் இருக்கக்கூடிய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறைவழிபாட்டில் மனதை செலுத்த வேண்டும். வீட்டில் காலையில் மாலையிலும் இறைவன் ஸ்லோகங்கள் மற்றும் பஜனைகளை கேட்பதன் மூலம் அதிக அளவு நேர்மறை ஆற்றலை வீட்டுக்குள் உற்பத்தி செய்து கொள்ளலாம்.

 நீங்கள் பேசும் வார்த்தைகள் தரமானதாகவும் மற்றவர் மனதை புண்படுத்தாத வண்ணம் இருக்கும்போது நேர்மறை ஆற்றல் நிச்சயம் ஏற்படும்.

தீய வார்த்தைகளை வீட்டுக்குள் பேசுவதினால் உங்களுக்கு எதிர்மறை ஆற்றல் மிகவும் என்பதை மனதில் கொண்டு வேண்டாத கெட்ட வார்த்தைகளை வீட்டில் பேசாதீர்கள்.

 குடும்ப நபர்களிடம் தேவையில்லாமல் ஈகோ பார்த்து அவர்கள் மனம் சங்கடப்படும் படியான வார்த்தைகளை பேசி சண்டைகளை உருவாக்குவதை தவிர்த்து விடுங்கள்.

 குழந்தைகளுக்கு எப்படி மூத்தோர்களை உண்மையாக நடத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதோடு நீங்களும் அதைப் பின்பற்றினால் அதைப் பார்த்து குழந்தைகள் அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள். இதன்மூலம் நீங்கள் நேர்மறை ஆற்றலை வளர்த்து விடலாம்.

 எப்போதும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்களது மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்ள தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபடுங்கள் இதன் மூலம் உங்களுக்குள் இருக்கும் நேர்மறை ஆற்றல் பிரதிபலிக்கும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top