நாதஸ் திருந்திட்டான் பா..? அவனே சொன்னான்..! - வம்பு நடிகரின் செயலால் தலையில் அடித்துக்கொள்ளும் படக்குழு..!


வம்பு நடிகர் என்றாலே எப்போதும் ஒரு சர்ச்சை அவரை வட்டமிட்டுக்கொண்டே தான் இருக்கும். கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் மணியான இயக்குனரின் மல்டி ஸ்டாரர் பதிலும் சுந்தரமான இயக்குனரின் வந்தா கிங்கு தான் படத்திலும் சமத்து பிள்ளையாக நடித்து கொடுத்தார். 

படங்களும் அடுத்தடுத்து வெளியாகின. நாதஸ் திருந்திட்டான் பா..? அவனே சொன்னான் என்று கூறும் கவுண்டமணி கணக்காக ரசிகர்களும் இனிமேல் பிக்அப் ஆகிவிடுவார் வம்பு என்று மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில், தற்போது நடித்து வரும் பக்கத்து ஸ்டேட் ரீமேக் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துவருகிறார். 

ஆனால், மீண்டும் பழைய குருடி கதவ தொறடி என்ற உவமைக்கு ஏற்றார் போல மாறிவிட்டார் வம்பு. தான் மட்டுமில்லாமல், தன்னுடைய இரண்டு மேக்கப் கேர்ள்ஸ் மற்றும் ஏழெட்டு நண்பர்கள் என ஸ்டார் ஒட்டலில் தங்கவைத்து உணவு, மது என சகலவிதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறாராம்.