பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகர்கள் போகிறார்களா..? - ரணகளம் தான்..!


தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு சீசன்களை நிறைவு செய்து இப்போது மூன்றாவது சீசனுக்குள் செல்கிறது. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்த வரை பிரபலங்கள் வருவதை விட, பிக் பாஸ் வந்து பிரபலமானவர்கள் தான் அதிகம். அந்த வகையில், இந்த முறை நடிகை மதுமிதா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் போட்டியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி புதிதாக இரண்டு பிரபல நடிகர்களின் பெயர்களை கூறுகிறார் பிக்பாஸ் குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள். அதில், இயக்குனர் சேரன் மற்றும் நடிகர் ராதா ரவி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறுகிறார்கள். சேரனை ஒரு பக்கம் விட்டுவிடுவோம். ஆனால், ராதாரவி பழுத்த நடிகர்.;

Share it with your Friends