சிறுவயதில் தனது தங்கையை நெஞ்சில் தூக்கி வைத்திருக்கும் விஜய் - பலரும் பார்க்காத புகைப்படம்..!


தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை விஜய் ஒரே இரவில் கொண்டு வந்த சாதனை அல்ல. 

அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மகனை ஒரு திரைப்பட நடிகனாக மாற்ற வேண்டும் என்று நினைத்து, அதன் முதல் முயற்சியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்தார். 


அதற்கு முன்பு நடிகர் விஜயகாந்த் படங்களில்  சிறு வயது விஜயகாந்தாக, விஜய் நடித்திருந்தாலும் இந்த 'நாளைய தீர்ப்பு' மூலம் அனைவரும் அறிந்த நடிகரானார் விஜய்.

அவரின் ஆரம்பகட்டப் படங்கள் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக உருவாகுவார் என்பதற்கு எந்த அடையாளமும் அற்று இருந்தன. ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த 'காதலுக்கு மரியாதை' விஜய் மீது ஒரு தனி மரியாதை உண்டாக்கியது உண்மை. 

அதில் அவர் ஒரு மென்மையான காதலனாக தோன்றி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இன்று பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள விஜய் சிறுவயதில் தனது தங்கையுடன் எப்படி இருந்திருக்கிறார் பாருங்க. பலரும் பார்த்திருக்காத அந்த புகைப்படம் இதோ,