பகலிலும் குடி, பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் - தடம் மாறும் முன்னணி ஹீரோ..!


தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் பட்டியலில் இந்த ஹீரோவிற்கும் இடம் உள்ளது. நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நிறுத்தி நிதானமாக நடித்து வருகிறார். 

ஆனால், இவரது வளர்ச்சி ஆமை வேகத்தில் இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இவர் தற்போது மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டாராம். முன்னர் இரவு நேரங்களில் மட்டும் குடித்து வந்தவர், தற்போது பகல் நேரத்திலும் குடிக்க ஆரம்பித்துவிட்டாராம். 

அதுவும் படப்பிடிப்பு தளத்திலும் குடிக்கிறார் என படக்குழு புலம்புகிறது. மட்ட்மல்லாமல் சிகரெட்டை பாக்கெட் பாக்கெட்டாக ஊதி தள்ளுகிறாராம். 

இதனால் காட்சிகளை எடுத்து முடியாமல் தாமதமாகிறதாம். நல்ல நடிகர் என வாங்கிய பெயரை கூடிய சீக்கிரம் கெடுத்துகொள்ளப் போகிறார் என கவலைப்படுகின்றனர் ஹீரோவின் நல விரும்பிகள்.

மேலும்,சினிமாவில் முன்னணியில் இருந்து இந்த குடிப்பழக்கத்தால் இருந்த இடம் தெரியாமல் போன ஹீரோக்கள் பற்றிய வரலாறையும் அவருக்கு எடுத்து கூறி வருகிறார்களாம்.
Advertisement

Share it with your Friends