விபச்சார வழக்கில் கைதான இளம் நடிகை - திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து..!


சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்வேதா பாசு "மாக்டி" என்ற ஹிந்தி படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்று இந்திய அளவில் பிரபலமானார். 

கால ஓட்டத்தில் பின் நாட்களில் உடல் எடை கூறி மப்பும் மந்தாரமுமாக மாறிப்போனார் அம்மணி. இதனால், அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. 

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் குடிபோதையில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். 

அதனை தொடர்ந்து, குடும்ப சூழல் காரணமாகவும் பணத்தேவை இருந்த காரணத்தினால் மட்டுமே நான் இந்த வேலையை செய்தேன் எனவும் இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து அவரை எச்சரித்து விடுதலை செய்தனர். 

வெளியில் வந்த அவர் ரோஹித் என்பவருடன் காதலில் விழுந்தார். அவருடன் சேர்ந்து உலகையே சுற்றினார். அவ்வபோது அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார் அம்மணி.

இந்நிலையில், கடந்த, 2018ம் ஆண்டு இறுதியில் அவருக்கு ரோஹித்-துடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் வாழ்க்கை துவங்கி ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் அவர்கள் தற்போது பரஸ்பரம் பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். 


திருமணத்திற்கு முன்பு நான்கு வருடங்களாக காதலித்து ஊர் சுற்றி வந்த அவர்கள். திருமணத்திற்கு பிறகு ஒரே வருடத்தில் பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து நடிகை ஸ்வேதா பாசு கூறியுள்ளதாவது, "அனைத்து புத்தகங்களையும் அட்டை முதல் அட்டை வரை படிக்க முடியாது. அதற்காக, அந்த புத்தகம் மோசமானது என்றோ, யாராலும் படிக்க முடியாது என்றோ அர்த்தம் இல்லை. சில விஷயங்களை முடிக்காமல் விடுவதே சிறப்பு. என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை தந்த ரோஹிதிற்கு நன்றிகள். உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

விபச்சார வழக்கில் கைதான இளம் நடிகை - திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து..! விபச்சார வழக்கில் கைதான இளம் நடிகை - திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து..! Reviewed by Tamizhakam on January 22, 2020 Rating: 5
Powered by Blogger.