"அந்தப்பொண்ணு உனக்கு செட் ஆகாது.! - வேணாம் வேணாம்-ன்னு எவ்வளவோ சொன்னேன் !! " ஏ.எல்.விஜயின் தந்தை ஆவேசம் !!


சிந்து சமவெளி படத்தில் ஹீரோயினாக நடித்து கெட்ட பெயர் வாங்கிய நடிகை அமலாபால். அதனை தொடர்ந்து வெளியான மைனா படத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்து வந்தார். அதே வேகத்தில், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை.திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு தலை தூக்கியதால் எந்த வித சண்டையும் இல்லாமல் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர் வேறொருவருடன் காதலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அமலா பால். ஆனால் ஏ எல் விஜய் விவாகரத்து பெற்றவுடன் விரைவாக செய்துகொண்டார்.

கடந்த வருடம் ஜூன் மாதம் சென்னையை சேர்ந்த மருத்துவரான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார்.அதிகமான நபர்கள் கலந்துகொள்ளாமல் நடைபெற்ற இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு மட்டும் சொல்லப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது. 

இந்தநிலையில் தராது ஏ எல் விஜய்யின் தந்தையும் நடிகருமான ஏ எல் அழகப்பன் விஜய்யின் முதல் திருமணம் குறித்து ஒரு பகீர் பேட்டியை கொடுத்துள்ளார்.அந்த பேட்டியில் உங்கள் பசங்க யாரும் சினிமாவுக்கு வரக்கூடாது என்பதர்காகத்தான் அமலா பாலை திருமணம் செய்வதை தடுத்தீர்களா என கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலித்த அவர் எனக்கு அதற்கு முன்னரே அந்தப்பெண்(அமலாபால்) மீது நம்பிக்கை இல்லை.மேலும் நான் விஜய்யிடம் எவ்வளவோ சொன்னேன் அந்தப்பெண் வேண்டாம் என்று அவனுக்கும் அந்தப்பெண்ணுக்கும் செட்டாகாது என்று.

ஆனால், அமலாபாலை தான் திருமணம் செய்துகொள்வது என உறுதியாக இருந்தார் விஜய். அதனால், திருமணத்திற்கு முன்பே அமலாபாலிடம் இந்து மதத்திற்கு மாற வேண்டும் திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என கூறினேன். அத்தனைக்கும் சரி, சரி என்று சொல்லிவிட்டு தலையை ஆட்டியது அந்த பொண்ணு. 

ஆனால், எப்போது நடிகர் தனுஷின் அம்மா கணக்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது தான் பிரச்சனையே வெடித்தது என தெரிவித்தார். அதன்பின்னர் எப்படியோ இருவருக்கும் பிடிக்காமல் விவாகரத்து நடந்துவிட்டது.பிறகு ஒரு வருடம் கழித்து ஒரு நல்ல குடும்பப்பெண் கிடைத்துவிட்டது.

இப்போது அவனுக்கு ஒரு நல்ல குடும்பம் அமைந்து சந்தோசமாக இருக்கிறான் என கூறியுள்ளார்.
Advertisement

Share it with your Friends