"இங்க ஐ.டி ரெய்டுன்னு கலவரமா இருக்கு - நீ என்னடான்னா.." - அட்லி வெளியிட்ட புகைப்படம் - கதறும் ரசிகர்கள்..!


மாஸ்டர் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் சந்தித்து பிகில் படம் குறித்து 5 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை தங்கள் காரிலேயே சென்னைக்கு அழைத்து வந்து பனையூரில் உள்ள அவர் வீட்டில் விடிய, விடிய சோதனை நடத்தினார்கள். 

இரண்டு நாட்களாக நடந்த சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் பிகில் பட பைனான்சியரான அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ. 77 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதை வருமான வரித்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. விஜய் வீட்டில் நடந்த சோதனைக்கு துருப்பு சீட்டே பிகில் படத்திற்கு நடிகர் விஜய் எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது தான்.

இதனால், விஜய் ரசிகர்கள் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாக பல கருத்துகளை வெளியிட்டு கொண்டிருகிறார்கள். ஆனால, பிகில் படத்தின்இயக்குனர் அட்லி தனது மனைவியுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வேறு வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், எங்கே கலவரம் பண்ணிவிட போகிறார்கள் என்று கமெண்டிற்கு பூட்டும் போட்டுவிட்டார். ஆனால், பிரபல வலைத்தளம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை போஸ்ட் செய்ய ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் என பாருங்கள்.


Advertisement

Share it with your Friends