போட்றா வெடிய..! - திரௌபதி படத்தின் சென்சார் முடிந்தது - ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்..!


‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ‘திரௌபதி’. இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. விழுப்புரத்தை பின்புலமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

டிரெய்லரில் வேறு சமூகத்தை சார்ந்த பெண்களை திருமணம் செய்பவர்களை குறிப்பிட்டும், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் வசனங்களை குறிப்பிட்டு பேசும்படியும் சில வசனங்கள் உள்ளன. இதனைப் பலரும் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ‘திரெளபதி’ பாத்திரத்தை குறித்து இயக்குநர் சில விளக்கங்களை அளித்திருந்தார் இயக்குனர் மோகன்.

பல விவாதங்களை கிளப்பிய இந்த படத்திற்கு சில அரசியல் அமைப்புகள் தடை விதிக்க கோரிக்கை வைத்தனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தை தணிக்கை முடிந்து "U/A" சான்று வழங்கியுள்ள தணிக்கை குழு.

இதனை தொடர்ந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கு 'திரௌபதி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இன்று மாலை வெளியாகும் என படத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. போட்றா வெடிய..! - திரௌபதி படத்தின் சென்சார் முடிந்தது - ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்..! போட்றா வெடிய..! - திரௌபதி படத்தின் சென்சார் முடிந்தது - ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்..! Reviewed by Tamizhakam on February 17, 2020 Rating: 5
Powered by Blogger.