"முத்தங்கள் மிகவும் முக்கியமானவை" - பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்..!


தமிழில் ‘பியார் பிரேமா காதல்’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை ரைசா வில்சன் நடித்து வரும் படம் ‘FIR’ (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்). விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார். 

இவர் பிரபல இயக்குநர் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இதில் ரைசா வில்சனுடன் இணைந்து மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், இயக்குநர்கள் கெளதம் மேனன் – கெளரவ் நாராயணன் ஆகியோர் நடிக்கின்றனர். 

அஸ்வத் இசையமைக்கும் இதற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படம் எமோஷனல் த்ரில்லர் ஜானரில் ரெடியாகுகிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

சமீப காலமாக நடிகை ரைசா வில்சன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். 

தற்போது, "முத்தங்கள் மிகவும் முக்கியமானவை" என கூறி தன்னுடைய செல்ல பிராணிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகள் அள்ளி வருகிறார் அம்மணி.

View this post on Instagram

A post shared by Raiza Wilson (@raizawilson) on

"முத்தங்கள் மிகவும் முக்கியமானவை" - பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்..! "முத்தங்கள் மிகவும் முக்கியமானவை" - பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on March 05, 2020 Rating: 5
Powered by Blogger.