வெள்ளை தேவதை, கன்னக்குழி அழகி.. மீரா அக்கா... - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தெய்வ மகள்" சீரியல் மூலம் தமிழக மக்கள் வீடுகளின் வரவேற்பறையில் ராஜ்ஜியம் அமைத்தவர் வாணி போஜன். ரசிகர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கின்றனர். 

சீரியலில் கவனம் செலுத்தி வந்த வாணி போஜனின் அசத்தல் அழகு மற்றும் அசாத்திய நடிப்பை பார்த்து தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவருக்கு ஹீரோயினுக்கு இணையான கதை முழுக்க பயணிக்கு கதாபாத்திரம். 

சொல்லப்போனால், ஹீரோயின் நூடுல்ஸ் மண்டை ரித்திகா சிங்கை விட மீரா அக்காவாக வந்த இவர் தான் படத்தின் அழகாக இருந்தார் என பல ரசிகர்கள் கூறினார்கள்.


தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற உடையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் வெள்ளை தேவதை, கன்னக்குழி அழகி.. மீரா அக்கா... என உருகி வருகிறார்கள்.வெள்ளை தேவதை, கன்னக்குழி அழகி.. மீரா அக்கா... - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! வெள்ளை தேவதை, கன்னக்குழி அழகி.. மீரா அக்கா... - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 12, 2020 Rating: 5
Powered by Blogger.