" இதெல்லாம் எவ்வளோ கேவலம் தெரியுமா..? " - பிக்பாஸ் ரித்விகா காட்டம்..!


நாடு முழுதும் கொரோனா வைரஸ் தாக்கம் Wi-Fi போல பரவி கிடக்கின்றது.  அந்த Wi-Fi யின் பாஸ்வோர்டான பொது இடங்களுக்கு செல்லுதல்,சுகாதாரம் இல்லாமல் இருத்தல் போன்றவற்றை செய்தால் நீங்களும் அந்த Wi-Fi நெட்வொர்க்கில் கனெக்ட் ஆகி விடுவீர்கள். 

அதனால், முடிந்த வரை வீட்டிலேயே இருங்கள். தவிர்க்க முடியாத வேலைகளுக்கு மட்டுமே வெளியில் உரிய பாதுக்காப்புடன் சென்று வாருங்கள்.

இப்படியான அறிவுரைகள் நொடிக்கு ஒரு முறை நம் காதில் வந்து விழுந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இதைனை காரணம் காட்டி, மாஸ்க்குகள், சானிடைசர்கள் ஆகியவற்றின் விலையை கூட்டி விற்பனை செய்வதாக பல பகுதிகளிலும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த பிரச்சனை குறித்து பல பிரபலங்களும் தங்களுடைய கருத்துகளையும், வேண்டுகோளையும் விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகையும், தமிழ் பிக்பாஸ் சீசன் 2  டைட்டில் வின்னருமான ரித்விகா இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு இது கேவலமான செயல் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

" இதெல்லாம் எவ்வளோ கேவலம் தெரியுமா..? " - பிக்பாஸ் ரித்விகா காட்டம்..! " இதெல்லாம் எவ்வளோ கேவலம் தெரியுமா..? " - பிக்பாஸ் ரித்விகா காட்டம்..! Reviewed by Tamizhakam on March 22, 2020 Rating: 5
Powered by Blogger.