"இப்படி எல்லாம் போட்டோ போடுறதுக்கு தில்லு வேணும் " - DD வெளியிட்ட புகைப்படங்கள் - ரசிகர்கள் ஷாக்..!


பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் பலருக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் பிடித்தமான தொகுப்பாளினி. 

மேலும், 20 வருடங்களாக சின்னத்திரையில் அவர் வெற்றி நடைபோட்டு வருகின்றார். விருது விழாக்கள், போட்டியில் நடுவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமாக்களில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என அசத்தி ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவர் டிடி. 

இருபது வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். நிகழ்ச்சியில் கவர்ச்சி ஆடையில் சமீப காலமாக தோன்றுகிறார்.

Salt & Pepper Hair Style

தற்போது, 36 வயதாகும் இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆன விஷயம் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், தனக்கு நரை முடி வந்துவிட்டதை புகைப்படம் மூலமாக அறிவித்துள்ளார் திவ்யதர்ஷினி.

நரைமுடிகள் தெரியும் படி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இப்படி எல்லாம் போட்டோ போடுறதுக்கு தில்லு வேணும் என்று கூறி வருகிறார்கள்.

"இப்படி எல்லாம் போட்டோ போடுறதுக்கு தில்லு வேணும் " - DD வெளியிட்ட புகைப்படங்கள் - ரசிகர்கள் ஷாக்..! "இப்படி எல்லாம் போட்டோ போடுறதுக்கு தில்லு வேணும் " - DD வெளியிட்ட புகைப்படங்கள் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on March 05, 2020 Rating: 5
Powered by Blogger.