ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய ஸ்ருதி ஹாசன் - வைரலாகும் வீடியோ..!


நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசனுக்கும் அவரது முதல் மனைவி சரிகா-விற்கும் பிறந்த மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். கல்லூரி படிப்பை முடித்ததும் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர். 

தமிழ் , தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வர ஆசைப்பட்டார். அதே போல முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்தார். ஆனால், இவர் நடித்த படங்கள் எல்லாம் பப்படம் ஆகின. ராசியில்லாத நடிகை என்று சினிமாகாரர்களால் அடையாளம் காணப்பட்டார். 

இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் "லாபம்" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.படம் வெளியான பிறகு லாபமா, நட்டமா என்று தெரியவரும்.

கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ஸ்ருதி ஹாசன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அவரிடம் ரசிகர்கள் சிலர் Hula Hoop எப்படி செய்வது என்பது குறித்த வீடியோ ஒன்றை பதிவிடுமாறு ரசிகர்கள் பலரும் கேட்டிருந்ததை அடுத்து அந்த வீடியோவை பதிவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதோ அவரின் அந்த வீடியோ


ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய ஸ்ருதி ஹாசன் - வைரலாகும் வீடியோ..! ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய ஸ்ருதி ஹாசன் - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 14, 2020 Rating: 5
Powered by Blogger.