நான்கே நான்கு உடைகள் மட்டுமே..! - நாகினி நடிகையின் பரிதாப நிலை..!


தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு ஹிட் அடித்த ஹிந்தி சீரியலான நாகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரபல பாலிவுட் நடிகை மவுனி ராய். 

தற்போது சினிமாவிலும் நடித்து வரும் இவர் அவ்வபோது விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். அந்த வகையில், விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக இவர் கடந்த மார்ச் மாதம் அபுதாபி சென்றிருந்தார். 

படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விமான சேவை துண்டிக்கப்பட்டதால் அவரால் உடனடியாக இந்தியா திரும்ப முடியவில்லை. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் அபுதாபியிலேயே சிக்கியுள்ளார். 

சில நாட்கள் மட்டுமே விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பு திட்டமிடப் பட்டிருந்ததால் அவர் நான்கு உடைகளை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளார். எனவே அந்த நான்கு உடைகளை வைத்தே இந்த இரண்டு மாதங்களையும் கடத்தியுள்ளார் மவுனி ராய்.

இந்த தகவலை மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார் மவுனி ராய். 

* போங்க மேடம் நீங்க பரவாயில்ல, நாங்க ரெண்டு லுங்கி ரெண்டு டீ-சர்ட்டை வச்சி காலத்தை ஓட்டிகிட்டு இருக்கோம்...

நான்கே நான்கு உடைகள் மட்டுமே..! - நாகினி நடிகையின் பரிதாப நிலை..! நான்கே நான்கு உடைகள் மட்டுமே..! - நாகினி நடிகையின் பரிதாப நிலை..! Reviewed by Tamizhakam on May 23, 2020 Rating: 5
Powered by Blogger.