காதலனால் கண்டமான சினிமா வாய்புகள் - புலம்பி தவிக்கும் இளம் நடிகை..!
மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுதும் ஹிட் அடித்த அந்த காதல் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் அந்த நடிகை. தமிழில், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார்.
சினிமா வாய்புகள் குவிந்தன. விஜயமான நடிகருடன் மட்டும் மூன்று படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் எங்கயோ போகப்போகுது இந்த பொண்ணு என்று முணுமுணுத்தார்கள்.
ஒவ்வொரு நடிகைக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். அந்த வகையில், இந்த நடிகைக்கு பிரச்சனை எதுவுமே இல்லை. இறுதியாக, அவரது காதலன் ரூபத்தில் வந்தது பிரச்சனை. எப்போதும் நடிகையுடனே இருக்கும் இவர் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு ஒரு பாதுகாப்பு அரண் போல இருந்துள்ளார்.
ஆனால், படத்தின் காட்சிகளில் மூக்கை நுழைத்து கையை பிடிக்க கூடாது, கட்டிப்பிடிக்க கூடாது என ஏகத்துக்கும் ரூல்ஸ் போட்டார். நடிகையிடம் இது பற்றி கேட்ட போது அவர் என்னுடன் இருக்கும் போது பாதுக்காப்பாக உணர்கிறேன் என்று புலகாங்கிகிதமடைந்தார்.
அதுவே அம்மணியின் சினிமா வாழ்க்கைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்து விட்டது. இந்த விஷயத்தை அறிந்த இயக்குனர்கள் அம்மணியை அப்படியே கழட்டி விட்டனர்.
அதிலும், சமீபத்தில் வெளியான நடிகர் திலக வாரிசு நடிப்பில் வெளியான ஒரு படத்தில் ஏன் தான் இவரை ஹீரோயினாக கமிட் செய்தோமோ என்று புலம்பிய படியே வேலை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஹீரோயினை மாற்றி விடலாமா என்று கூட யோசிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளார் இயக்குனர்.
பிறகு, இது என்ன சீரியலா..? இவருக்கு பதில் இவர் என்று போடுவதற்கு என பல்லை கடித்துக்கொண்டு படத்தை முடித்து கொடுத்துள்ளார். இப்போது, பட வாய்புகளே இல்லாமல் புலம்பி வருகிறார் அம்மணி. சாரி.. சாரி.. பாதுகாப்பாக புலம்பி வருகிறாராம் அம்மணி.
காதலனால் கண்டமான சினிமா வாய்புகள் - புலம்பி தவிக்கும் இளம் நடிகை..!
Reviewed by Tamizhakam
on
June 19, 2020
Rating:
